LORD KALAHASTHEESWARAR

Supreme Lord Shiva manifests Himself in the form of the five elements namely prithvi (Earth), Appu (Water), Theyu (Agni Fire), Vayu (Air) and Akash (Ether).

In the sacred hill of Kalahasthi He prevails as Kalahastheeswarar in the form of Vayu (Air) with His consort Sri Gnanaprasoonambiga. Lord of all Universe. He presides in the mind of those who seek refuge in Him and in the words of those that sing in praise of Him.

மனத்தகத்தான் தலைமேலான்

வாக்கினுள்ளான் வாயாரத் தன்னடியே பாடுந்தொண்டன
இனத்தகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான்
ஏழ் அண்டத்து அப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதில் உள்ளான் பொறுப்புடையான்
நெருப்பிடையான் காற்றின் உள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்துச்சியுள்ளான்
காளத்தியான் அவன் என் கண்ணுளானே

மனத்தில் உள்ளவன், அனைத்திற்கும் தலையாயவன், சொல்லும் சொற்களின் பொருளாய் நிற்பவன், வாயாரப் பாடும் தொண்டர் இனத்தை மனதார விரும்புபவன், தேவர்கள் அனைவருக்கும் மேலானவன், ஏழு உலகிற்கும் அப்பாற்பட்டவன், பஞ்ச பூதங்களுள் நெருப்பு இடைநின்ற காற்று வடிவாக அமைந்தவன், கயிலாய் மலையில் உச்சியில் வாழ்பவன், பெருமை வாய்ந்த காளத்தியான் என் கண்களுக்குக் காட்சியாக எப்போதும் இருக்கின்றான்.