SRI ANDAL
The presiding deity of Srivilliputhur - Andal, also known as Soodikodutha Sudarkodi, is one of the twelve Vaishnava Saints (Alwargal). She is considered to be the reincarnation of Mahalakshmi, the consort of Sri Vishnu born to be adopted by the Vaishnava Saint Periazhvar. She shunned marriage to any human being and always looked upto the Lord as her husband. Even as a child she spontaneously wore the farlands made for the Lord first and then decorated Him with it. That is why she was called Soodikodutha Sudarkodi. Her daily talk, songs and deeds were always about the Lord and in response to her deep love for the Lord, she was taken in union with Him on Pooram day in the month of Aadi (15th July - 15th August).

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றவேல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இவற்றைப் பறைகொள்வானென்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்!

“ அதிகாலையில் எழுந்து உன் பொற்றாமரை திருவடிகளைச் சேவித்து உன்னைப் போற்றி வணங்கும் எங்களை, பசுக்களை மேய்க்கும் குலத்தில் பிறந்திருந்தும் எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி எங்களுக்கு நல்லருள் புரிந்து காக்கின்றாய். எனவே என்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் நாங்கள் உன்னோடு இருக்கும் பேறும் உனக்கே பணி செய்யும் வரமும் தந்தருள்வாய். மற்றை எமது செயல்களை மாற்றாத நிலைமையும் வேண்டும்” என்று கண்ணனிடம் வேண்டுகிறார் ஆண்டாள். நாமும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் வழிநின்று நாராயணனின் திருவடிகளைச் சிந்தித்து பேறுகளைப் பெறுவோமாக.