Lord Nataraja

Thou Art the one that accepts the anointment of fragrant ghee, milk and curd. Thou art the one that chose the holy temple of Chidambaram.. the temple that eternally houses the dikshithars.. as your dancing resort, Wearing the crescent moon on your locks. You sing the Vedas and the Ragas. Enwrap me with your gracious benevolence..O! Lord nataraja that I may be freed from my past sins.

ஆடினாய் நறு நெய்யொடு பால்தயிர்
அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங்கொன்ற நயந்தவனே
பாடினாய் மறையோடு பல்கீதமும் பல்சடைப்பனி
கால் கதிர் வெண்திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எமதொல்வினையே

நறுமணம் கமழும் நெய்யொடு பால்தயிர் என்ற திரவியங்களால் தன்னைத் திருமஞ்சனம் செய்து கொள்பவன்; அந்தணர்கள் பிரியாது சூழும் சிற்றம்பலத்தை நடனமாடும இடமாகக் கொண்டவன். மணம் வீசும் கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவன். வேதத்தையும், கீதத்தையும் நயந்து பாடுபவன். சடையினில் கங்கையையும், பிறைத் திங்களையும் சூடியவன். நடராஜப் பெருமானே எமது பல்வினைகளையும் சுருங்க அருள் புரிவாய்.