Goddess Abirami

Abirami is the presiding deity of Thirukkadavoor and the consort of Lord AMirthakadeswara. Poet Abirami Battar glorifies Her as the fragrant creeper that entangles herself with her Lord inseparable like a word and its meaning. Those that worship her lotus feet day in and day out are bound to be blessed with all the wealth that is essential for this worldly life and shall also attain the abode of Lord Shiva (Shivaloka) as a result of their forthright disciplined life.

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமள பூங்கொடியே நின்புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே

நடனம் புரியும் நடராஜப் பெருமானுடன் சொல்லையும் அதன் பொருளையும் போல பிரியாது பிணைந்து நிற்கும் நறுமணம் கமழும் பூங்கொடி போன்ற அபிராமியே உன் மலர்த்தாள்களை அல்லும் பகலும் தொழும் அடியார்களுக்கு அழியாத பூலோகச் செல்வங்களும் கைகூடும். பின்பு தவநெறியும், சிவலோகமும் தானாக வந்தடையும்.