Sri Annapoorneswari

The Presiding Deity of Varanasi is Sri Annapoorneswari. Seated in golden splendour, holding a cup full of rice in the one hand and a spoon in the other, She is the Goddess proffering nourishment to the Universe. It is believed that every day in the morning the Deity’s door is opened even earlier than that of Lord Shiva and all rituals are performed in Her temple first. Only later, the rituals are performed to Lord Shiva and He comes to her to receive Biksha or food. The golden Annapoorni is believed to be worshipped by Lord Kubera (Lord of Wealth) all year and is opened to public Darshan only for three days namely the day of Deepavali, the day before and the day after. May Her grace and benevolence be bestowed upon all.

காசி க்ஷத்திரத்தில் கரங்களில் அன்னம் நிறந்த கிண்ணமும், கரண்டியும் தாங்கி கொலு வீற்றிருக்கும் தேவி அன்னபூரணி புவனங்கள் பதினான்கினுக்கும் உணவு அளிப்பவள். நாள்தோறும் அதிகாலையில் அம்பிகையின் நடைக்கதவே முதலில் திறக்கப்பெற்று அபிஷேக அலங்காரங்கள் செய்யப் பெறுகின்றன. பிறகுதான் சிவபெருமானுக்கு அபிஷேக அலங்காரம் செய்விக்கப் பெறுகின்றன. சிவபெருமான் அம்பிகையிடம் வந்து பிக்க்ஷ பெற்றுக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது. தங்க அன்னபூரணிக்கு வருடமெல்லாம் குபேரன் பூஜை செய்வதாகவும் ஆண்டிற்கு மூன்று நாட்கள் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்படுவதாகவும் நம்பிக்கை. தீபாவளி தினம், அதற்கு முந்தைய தினம் மற்றும் மறுதினம் என்பன அம்மூன்று தினங்கள். உலகெலாம் வாழ அன்னம் பாலிக்கும் அம்பிகையின் அருள் நமக்கும் என்றும் கிட்ட வணங்குவோமாக!