Karpaga Vinayagar

The presiding Deity of Pillayarpatti is the Lord Ganesha, also known there as Karpaga Vinayagar – the name devotees dedicate unto him for His bountiful grace like the Karpaga Vriksham – bestowing upon the devotees all wishes even before they ask for them. Pillayarpatti is one of the nine temples in the region of the Nattukottai Nagarathars – a merchant class of Southern India, also known as Chettiars. The nine temples namely Pillayarpatti, Iraniyoor, Illayathangudi, Nemam, Vairavan Koil, Mathoor, Illupakudi, Soorakudi and Velangudi are infact the nine gotras the Chettiars belong to.

Pillayarpatti is a cave temple and the Vinayagar is a massive figure which is easily visible from the entrance of the huge temple. Ganesha, beseated uniquely with only two arms has a Shivalingam in the right palm. Karpaga Vinayagar adorned with his gold Kavacham and diamond Vibuthi pattai with open arms is the divine treasure house of all good things that the devotees may wish for.

அற்புதக் கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்க வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பகமூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை
        - கவிஞர் கண்ணதாசன்


பிள்ளையார்பட்டி திருக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் எனும் செட்டியார் சமூகத்தின் ஒன்பது கோயில்களில் ஒன்று. ஒன்பது கோயில்கள் என்பன பிள்ளையார்பட்டி, இரணியூர், இளையாற்றங்குடி, நேமம், வைரவன் கோயில், மாத்தூர், இலுப்பக்குடி, சூரக்குடி, வேலங்குடி, கோயில் பிரிவுகள் நகரத்தார் சமூகத்தின் கோத்திரப்பிரிவு என்று கூறலாம்.

பிள்ளையார்பட்டி குடவறைக் கோயிலில் குடி கொண்டிருக்கும் பிரம்மாண்ட உருவம் கொண்ட கற்பக விநாயகர் அமர்ந்த கோலத்தில் இரண்டு கரங்கள் மட்டுமே கொண்டு, வலது கரத்தில் சிவலிங்கத்துடன் அமைந்திருக்கும் தோற்றம் அபூர்வமானது. பக்திப் பெருக்குடன் அடியார் நினத்த மாத்திரத்திலேயே அவர் விரும்பும் நல்லன எல்லாவற்றையும் அள்ளித்தரும் பிள்ளையார்பட்டி. இங்கு சென்று பணிந்து பார்க்கும் அனவருக்கும் தெளிவாகப் புரியும் இவ்வுண்மை என்கின்றார் நாட்டுக்கோட்டை நகரத்தாரில் ஒருவரான கவிஞர் கண்ணதாசன்.