Arulmigu Meenakshi Amman

Meenakshi Amman, the Divine Consort of Lord Sundareswarar is the presiding deity of the Madurai Sri Meenakshi Temple. Legend goes that Parvathi was born as a beautiful girl child to the Pandya King Malayathvajan who ruled from Madurai. Meenakshi grew up with untold beauty and valour and Lord Shiva incarnated as Sundareswarar to marry Her who ruled Madurai (also known as Kadamba Vanam) as queen. Meenam is fish and Akshi is eyes. Meenakshi means one with fish-like eyes. It is believed that amongst living creatures the fish has the power to hatch its eggs with its looks alone. Goddess Meenakshi’s glance can bring multifold blessings to her devotees even devotees even before they can ask for them. Her beauty and glory have to be seen to be believed.

அருள்தரு மீனாட்சி அம்மன் மதுரைத் திருக்கோவிலின் பிரதான தெய்வம். அருள்மிகு சுந்தரேசரின் துணைவி. புராணங்கள் கூறுவது யாதெனில் பாண்டிய மன்னன் மலையத்துவஜனின் தவத்திற்குப் பலனாக பார்வதி தேவியே அவனுக்குப் பெண் மகவாகப் பிறந்து அளவிலாத வீரமும், அழகும் கொண்டு வளர்ந்து பாண்டிய நாட்டினை ஆண்டு வந்தாள் என்றும் அவளைத் திருமணம் முடிப்பதற்கென்றே சிவபெருமான் சுந்தரேசராக அவதரிந் வந்து மணம் முடித்தார் என்பதாகும். மீனாட்சி என்ற பெயரின் பொருள் மீன் போன்ற கண்களை உடையவள் என்பதாகும். மீன் ஆனது தனது பார்வையாலேயே தனது முட்டைகளைப் பொரிக்கும் வல்லமை பெற்ற உயிரினம். அதுபோல் அம்மையும் தனது அடியார்களின் வேண்டுதல்களைத் தனது அருட்பார்வையாலேயே அளிக்கக்கூடியவள் ஆகவே மீனாட்சி திருப்பெயர் உடையாள் என்பது பொருத்தமே! அவளது அருளும் எழிலும் பொங்கும் உருவத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.

................எறிதரங்கம்
உடுக்கும் புவனங்கடந்து நின்ற
ஒருவன் திருவுள்ளத்திகழ
கொழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோவியமே!

         குமரகுருபரர்
         "மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்"
         தொகுப்பு : திருமதி தேவகி முத்தையா