• நெஞ்சு பொறுக்குதில்லையே!! (பகுதி - 3)

    சமீபத்தில்தான் நவராத்திரி விழாவும், தீபாவளிப் பண்டிகையும் நிறைவு பெற்றிருக்கின்றது. நவராத்திரி அம்பிகை மஹிஸாசுரனுடன் போர் புரிந்த ஒன்பது இரவுகளையும் அவனை வதம் செய்த தஸமி தினத்தை விஜயதசமி என்றும் எங்கும் கொண்டாடப்படும் விழாவாகும். அம்மன் கோயில்கள் அனைத்திலும் உற்சவ அம்மனுக்கு தினம் அபிஷேகமும், விதவிதமான அலங்காரங்களும் செய்விக்கப் பெற்று, மாலை நேரத்தில் அர்ச்சனைகள், பூஜைகள் என்று விமரிசையாகக் கொண்டாடப் பெறுகின்றது. விஜயதசமி மாலையில் அம்மன் குதிரை வாகனத்தில் வந்து மைதானத்தில் அம்பு போடும் பழக்கமும் பல கோயில்களில் உண்டு. நவராத்திரி விழாவின் பத்து நாட்களும் விரதங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். அம்பாளுக்குக் காப்பு கட்டி விட்டால் நல்ல விசேஷங்கள் தவிர கேதங்கள் போன்ற துக்க காரியங்களுக்குச் செல்லக் கூடாது என்பது மரபு. அம்மன் முன்பு முளைப்பாலிகை இட்டு வைத்து, பத்தாம் நாள் அம்மனுக்கு மஹாபிஷேகம் செய்துவித்து, முளைப்பாலிகை பிரசாதமாக வழங்கப் பெறுகின்றது. பத்து நாட்கள் தீட்டுத் தடங்கல் இல்லாது நடத்தபட வேண்டிய விழா. குடும்பங்களில் அதுவும் பெண்கள் எல்லா நாட்களிலும் நடத்துவது என்பது கடினம் என்பதாலேயே இவ்விழாக்கள் பொது இடங்களில் அதாவது கல்யாண மண்டபங்களிலும், கோயில்களிலும் நடத்தப் பெற்றன. தற்காலத்தில் எல்லாப் பழக்கங்களும் மாறிவிட்டன. அப்பப்பா!!! இந்த நவராத்திரி விழாவினை முற்றிலும் வியாபாரம் போல் செய்து விட்டனர் தற்காலத்தவர். அம்மனை முதல் நிறுத்தி செய்ய வேண்டிய விழாவில், அம்மனையே விட்டு விட்டு கொடுக்கல், வாங்கல்தான் பிரதானமாக ஆகிவிட்டது. வீட்டுக்கு வீடு போட்டி வேறு. முன்பெல்லாம் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் மற்றும் பழம்தான் தாம்பூலப் பிரசாதமாகக் கொடுக்கப் பெற்றது. இப்பொழு விதவிதமான பைகள் என்ன. அதில் ஹேர் பாண்டுகளும் (Hair Band), கிளிப்புகளும், ஸ்டிக்கர் பொட்டுகளும் (குங்குமம் இட்டுக் கொள்ளும் பெண்கள் வெகுக் குறைவு), லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் என்று கன்னா பின்னாவென்று பரிசுப் பொருள்கள் வழங்கப் பெறுகின்றன. போட்டி என்று சொன்னேனே. அதிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதர சகோதரிகளாக இருந்து விட்டால் போதும். “அவள் கொடுத்ததை விட நான் ஒரு ஹேர் பின்னாவது அதிகம் கொடுக்க வேண்டும் எனும் எண்ணம் அதிகமாகி விடுகின்றது. ஒரு பத்து வீடுகளிலிருந்தாவது அழைப்பு வருகின்றது. முன்பெல்லாம், ஒன்பது நாட்களும் கொலு வைப்பவர்கள், அவரவர் வீடுகளிலேயே இருப்பார்கள். அழைப்பு வந்தவர்கள் சென்றால், அவர்களை வரவேற்று உபசரிப்பார்கள். இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு நாட்கள்தான் அழைப்பு என குறிப்பிடப்படுகின்றது. அந்த இரண்டு நாட்களில் அடித்துப் பிடித்துக் கொண்டு போக வேண்டும். இப்பொழுது தெருக்களில் இருக்கும் வாகன நெரிசலில் பத்திரமாகச் சென்று திரும்பினாலேயே போதும் போதுமென்றாகிவிடுகின்றட்ப்து. ஒரு நவராத்திரி விழாவின் போது இருபதிலிருந்து இருபத்தைந்து வீடுகளிலிருந்து அழைப்புகள் வருகின்றனது. எதற்குப் போவது. எதனை விடுவது!!

    முன்பெல்லாம் மண் பொம்மகளை மட்டுமே வாங்கிக் கொலுவில் வைத்தார்கள். இப்போழுது பேப்பர் மேஷ், பிளாஸ்டிக் என்று பலவிதம் வந்து விட்டது. இது போதாதென்று சில வீடுகளில் குழந்தைகள் விளையாடும் கார், ஜீப், துப்பாக்கி என்று விளையாட்டுப் பொருள்களை வைத்து நவராத்ரியை கேலிக் கூத்தாக்குகின்றார்கள். எதை வேண்டுமானாலும் வைக்கலாம் என்றிருந்தால் அதற்குக் கொலு என்று ஏன் பெயர் வந்தது. படிக்கட்டு வைத்து தரையில் தானியங்கள், புல் போன்றவை இட்டு, அதற்கு மேல் படியில் மிருகங்கள், பறவைகள் போன்ற ஐந்தறிவுப் பிராணிகளையும், அதற்கு மேல் படியில் சாமானிய மனிதப் பொம்மைகள், அதற்கும் மேல் நாட்டுத் தலைவர்கள், பூத கணங்கள் போன்ற பொம்மைகளும், உச்சிப் படியில் தெய்வப் பொம்மைகளயும் அடுக்குவதுதான் மரபு. உலகில் போரே வேண்டாம் எனும் போது துப்பாக்கி கொலுவில் எதற்கு?

    துப்பாக்கி என்றதும் விநயாகர் சதுர்த்தியும் நினைவிற்கு வருகின்றது. பிள்ளையார் பஞ்ச பூதங்களில் ஒன்றான களி மண்ணிலோ, மஞ்சளிலோ செய்யப் பெறுவதற்குக் காரணம் அவை நீரில் விரைவில் கரையும் பொருள்கள் என்பதால்தான். எப்பொழுதுமே கக்கு அடக்கமான மூர்த்தியாக இருப்பது நலம். மூர்த்தி பெரிதாக ஆக அதற்குத் தேவையான நெய்வேத்தியம் (படயல்), சோடச உபசாரங்கள் அனைத்தும் அளவைப் பொறுத்து அதிகமாகின்றது. இவையெல்லாம் ஒரு நாள் செய்து மறுநாள் செய்யாமல் விடும் சமாச்சாரங்கள் அல்ல. ஆரம்பித்தால் தொடர்ந்து செய்ய வேண்டும். தெய்வப் பொம்மைகளில் உலகத்திலேயே பெரிய உருவம அல்லது ஊரிலேயே பெரிய பிள்ளையார் என்று வேண்டியிருக்கின்றது? தெய்வம் எப்போதும் தெய்வம்தானே. சொல்லப் போனால் "மூர்த்தி சிறியது கீர்த்திப் பெரியது “ என்பார்கள். அப்படியிருக்க பதினந்து அடி, இருபது அடி உயரம் பேப்பர் மேஷ், அட்டை போன்ற பொருட்களில் செய்து பெயிண்ட் அடித்து பிள்ளையாரை கிரேனில் வைத்துத் தூக்கிக் கடலில் காலால் அமுக்கி - கடவுளே!! நாம் வணங்கிய பிள்ளயாருக்குக் கொடுக்கும் மரியாதையா இது!! பல அமிலங்கள், கெமிக்கல்ஸ் வகைகளால் செய்யப்பட்ட பெயிண்டுகளால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எத்தனை தீங்கு!!. பிள்ளயாரில் கிரிக்கெட் ஆடும் பிள்ளயார், ஹேலிகாப்டர் ஓட்டும் பிள்ளையார் என்றெல்லாம் போய் தற்போது ஏ.கே-47 துப்பாக்கி ஏந்திய பிள்ளையார் வந்து விட்டது. புராணங்கள் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதற்கு தெய்வங்களைத்தான் முன்னோடியாகக் கூறுகின்றனது. அந்தத் தெய்வத்தின் கையிலேயே துப்பாக்கியைக் கொடுத்து நாம் குழந்தைகளுக்கு என்ன போதிக்கின்றோம்? நாம் எங்கு போய்க் கொண்டிருக்கின்றோம்?

    தீபாவளிப் பண்டிகை கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்த நாளக் குறிக்கும். நரகாசுரன் தான் இறைவனின் திருக்கரங்களால் சம்ஹாரம் செய்யப் பெற்ற நாளை அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டும் என்று விரும்பியதால் அனைவரும் எண்ணெய் தேய்த்து, ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி குடும்பத்தினருடன் உண்டு மகிழும் நாள். புத்தாடை வாங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு முறை அல்ல இரு முறை உடுத்திய உடையென்றாலும் பரவாயில்லை. குளித்து விட்டு உடுத்திக் கொள்ளலாமே. இதவிடுத்து. புதிய வாங்க வேண்டுமென்று கடைகளில் மோம் கூட்டம் கடலையும் மிஞ்சி விடுகின்றது. இதில் களைப்பு, கசப்பு, களவு என்று எத்தனை, எத்தனை வேதனைகள். பண்டிகயின் அருமயே கெட்டு விடுகின்றதே. சரி. புதிது வாங்க வேண்டுமென்றால் தீபாவளிக்குக் கொஞ்சம் நாள் முன்னதாகவே வாங்கி வத்க் கொள்ளக் கூடாதா? கடைகளிலும் இதுதான் சமயம் என்று இருக்கும் பழய சரக்குகளையெல்லாம் தள்ளலாமா?

    தீபாவளியன்று கோயிலுக்குச் செல்வோர் மற்றவர்கள் என்ன உடை உடுத்தியிருக்கின்றார்கள் என்றுதான் பார்க்கிறார்கள். இந்தப் புடவை எங்கு வாங்கியது? என்ன விலை? இவைதான் வசனங்களேயன்றி இறை வழிபாடு என்ப இரண்டாவதான். பண்டிக முதல் நாள் இரவு பட்சணங்கள் செய்து கண்விழித்து விடியும் முன்பு கங்கையை நினைத்து ஸ்நானம் செய்த அந்தக் காலம். சீட்டாட்டம், கேளிக்கை, சினிமா என்பதான் இந்தக் காலம். குடும்பத்திற்குத் தேவையான அளவு மட்டும் இனிப்புகளை செய்து கொண்ட அந்தக் காலம். பெட்டி பெட்டியாகக் கடகளில் வாங்கிய ஸ்வீட்டுகள வீடு விடாக அனுப்பி வப்ப இந்தக் காலம். ஆயிரக் கணக்கில் செய்யப்படும் ஸ்வீட்டுகள் கையில் எடுக்கும்போதே பிசுபிசுக்கின்றன!!! சுகாதாரமும் கெட்டு, ஆரோக்கியத்தயும் கெடுக்கக்கூடிய தின்பண்டங்கள் இப்பொழு அதிகம். இதெல்லாம் பரவாயில்லை. பட்டாசுகளைப் பார்க்கும் போதும், வெடிக்கும் போதும் அவற்றை உற்பத்தி செய்வதையேத் தொழிலாகக் கொண்டுள்ள சிறுவர்கள் நினைவுதான் மனதை உருக்கிக் கண்ணீர வரவழைக்கின்றது!!. பட்டாசு வெடிப்பதில் விளையும் விபத்துக்கள் மறு பக்கம்!!. அடுக்குமாடிக் கட்டிடங்களில் ஆபத்து இன்னும் அதிகம். சிங்கப்பூர், சீனா போன்ற ஊர்களைப் போல் பொது இடங்களில் மட்டும் வெடிக்கட்டு விழா (Fire Works) வைத்து விட்டு வீடுகளில் வெடிக்கும் பழக்கத்தை விட்டு விடக்கூடாதா?

    ஆங்கிலப் புத்தாண்டு வந்து விட்டது. இரவெல்லாம் கொட்டமடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் போவோர் வருவோரயெல்லாம் கிண்டல்செய் லூட்டி அடிக்கும் இளஞர்கள் வாழ்க!! மார்கழி மாதம் என்பதால் விடிகால கோயில்கள் நடை திறந்து விடுவார்கள் சரி!! இரவெல்லாம் கோவிலை திறந்து வைக்க வேண்டுமா? டிஸ்கோ பேப்பர் அலங்காரங்கள் வேறு!! மது அருந்திவிட்டு கோயிலுக்கு பல் கூட விளக்காமல் வரும் கும்பலை என்ன செய்வது? எங்கு போய் விட்ட நமது பண்பாடு. எங்கு மறைந்து விட்டது நமது கலாச்சாரம். நெஞ்சு பொறுக்குதில்லையே!!

     
         
    Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com