• கடல் கொள்ளுமா? ஆம் கொண்டது! அதுவே கடல்கோள்

  கடல்கோள் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் மட்டுமே படித்திருந்த நாம் அனைவரும் கடல் கொள்வதைக் கண்ணெதிரே கண்டு மருண்டோம். “கோள்" என்றால் “குற்றம்" என்று பொருள். நிலத்தைக் கடல் கொள்ளும் கோளைப் புரிவதால் அது கடல் கோளானது.

  தமிழ் இலக்கியங்கள் ‘லெமூரியா" என்றொரு கண்டம் கிட்டத்தட்ட 48 நாடுகளைக் கொண்ட கண்டம் இருந்ததாகவும் இக்கண்டத்தையே கடல் கொண்டதாகவும் கூறுகின்றன. ஸ்காட் எலியட் (Scot Elliot) என்ற அறிஞர் “அழிந்துபோன லெமூரியா" எனும் நூலில் ஆப்ரிக்க கண்டம் முதல் ஆஸ்திரேலியக் கண்டம் வரையும் விந்தியம் முதல் கிழக்கிந்தியத் தீவுகள் வரையிலும் பரந்ததொரு நிலப்பரப்பு அமைந்திருந்ததாகவும் அங்கு மனிதனைப் போன்ற ‘லெமூர்" எனப்படும் குரங்குகள் அதிகம் இருந்ததால் ‘லெமூரியா" என்று அதனை அழைத்தனர் என்றும் கூறியிருக்கிறார். இங்குதான் முதன் முதலில் மனித இனம் தோன்றியிருக்க வேண்டும் என்று பல சான்றுகளுடன் அவர் நிலைநாட்டியுள்ளார். இக்கடல் கோளுக்கு முன் தென்னிந்தியா மட்டுமே இருந்ததாகவும் கங்கை நதிப்புறம் கடலாகவே இருந்ததென்றும் இமயமலை பின்புதான் எழும்பியதென்றும் ஆய்வுகள் கூறுகின்றன. (Sir Walter Raleigh) வால்டர் ராலே என்பவரும் லெமூரியாவே மக்களினம் தோன்றிய முதல் நிலப்பரப்பு என்னும் கருத்தினை நிலநாட்டி, கடல் கொண்டதனால் அந்நிலப்பரப்பு அழிந்தது என்றும் அங்கிருந்த மக்கள் இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் குடியேறினர் என்றும் சான்றுகளுடன் காட்டியுள்ளார்.

  இத்தனைப் பெரிய கண்டத்தைக் கடல் கொண்டு மிஞ்சிய “பாலினேஉஷியா" எனும் உறவாய்த் தீவுகள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், மாலைத் தீவுகள், லட்ச தீபத் தீவுகள் மற்றும் பல சிறு சிறு தீவுகள் என்பர். உறவாய்த் தீவில் வசிக்கும் மக்களிடையே நம் பாரம்பரிய பழக்க வழக்கங்களைப் பார்க்கலாம். விருந்தினரைப் பூமாலை அணிவித்தே அவர்கள் வரவேற்பர். நம் நாட்டுப் பெண்மணிகள் தலையில் பூச்சூடிக் கொள்வதுபோல் அந்நாட்டுப் பெண்களும் தலையில் பூ அணிந்து கொள்வர். தென்னை, பாக்கு, மா, பலா, வாழை போன்ற மரங்கள் வெற்றிலை, மல்லிலை போன்ற கொடிகள் என்று தாவரங்களும் நம் தென்னாட்டை ஒத்தே இருக்கும்.

  இலங்கை இந்தியாவுடன் இணைந்திருந்த பகுதி என்றும் தனுஷ்கோடி பகுதி கடல் கோளினால் அழிந்துபட்டது என்ற செய்தியும் இதன் காரணமாகவே இலங்கை தனித் தீவான என்பம் பூகோள ஆய்வுகள் வழி தெரியும் உண்ம. மாமல்லபுரத்க் கடற்கரைக் கோவில்கள் கடல் கோளில் மூழ்கி ஏழு கோவில்களில் ஒன்றுதான் மிஞ்சியுள்ளது என்பம் சரித்திர ஆய்வு உண்மை.

  காவிரி ஆறு கடலில் கலக்குமிடத்தில் புகார் என்றும் காவிரிபுகும்பட்டினம் என்றும் அழைக்கப்பெற்ற அழகிய நகரம்!! அந்நகரம் கடலில் கண்முன்னேயே அழிவதைக் கண்டு மிரண்ட அந்நகர மக்கள்தான் தண்ணீரே இல்லாத ராமனாதபுரத்தின் எல்லையில் கோட்டைகள் போல் தரை மட்டத்தைவிட அதிக உயரமாக வீடுகளைக் கட்டிச் சென்று குடியேறிய நாட்டுக்கோட்ட நகரத்தார்கள். கற்புக்கரசி கண்ணகியும் அற்புதத் திருவந்தாதி படத் அந்தாதி இலக்கியத்திற்கே முன்னோடியாக அமைந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரும் பிறந்த குலம் !! “கட்டிய துணியும் காதறுந்த ஊசியும் இறந்தபின் உடன் வாரா" என்று பாடிய பட்டினத்தடிகள் பிறந்தம் இக்குலம்!! சமீப காலத்தில் “நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்று பாடித், தனது பாடல்களால் மக்களின் மனதைக் கவ்விக்கொண்ட கவியரசர் கண்ணதாசன் பிறந்தம் இக்குலமே!! வானொலி, தொலைக்காட்சிகள் செட்டிநாட்டு சமையல் என்றும், ஆச்சி மிளகாய்த் தூள் என்றும் அடிக்கொரு தரம் விளம்பரம் செய்வதும் இந்நாட்டு மக்கள உணவுகள்தான். இன்றும் இக்குலத்தவர் உலகின் எந்த மூலயில் இருந்தாலும் காவிரியை நினைத்து வணங்காமல் இருக்கவே மாட்டார்கள். ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் கூடி காவிரித்தாய்க்குக் “காவிரி புராணம்" படித்துப், பல உணவு வகைகளையும் வைத்துப் படைத்து அனைவருக்கும் மஞ்சள் குங்குமத்துடன் வழங்கி வழிபடுவர். ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் நகரத்தார்கள் கூடி “காவிரி புராணம்" படிப்பதைப் பார்க்கலாம்.

  கடல்கோளதனை ஒரு சவாலாக ஏற்று வாழும் நாடு உறாலண்டு எனப்படும் நெதர்லாண்ட்ஸ் நாடுதான். இச்சிறிய நாட்டின் பெரும்பகுதி கடல் மட்டத்திற்குக் குறைவாகவே இருக்கும். இருப்பினும் Wind Mill எனும் ராட்சத ராட்டினங்களைக் கொண்டு கடல்நீரை அப்புறப்படுத்திவிட்டுப் பல அழகிய பூக்களைப் பயிர் செய்கின்றது இந்நாடு. உறாலந் நாட்டின் (Tulips) டியூலிப்ஸ் எனப்படும் பூவகை உலகப் பிரசித்தி பெற்ற (Fraesian) பிரிஷியன் எனும் வகைப் பசுமாடும் அதன் பாலும், அப்பாலினின்று செய்யப் பெற்ற வெண்ணெய் சீஸ் (Cheese) வகைகளும் தரத்தில் உயர்ந்தவை!! கடின உழைப்பால் இயற்கையையும் வென்றவர்கள் உறாலந் நாட்டவர்கள். கடல் அரிப்பதைத் தடுப்பதற்காகப் பல கிலோ மீட்டர் தூரத்திற்குத் தடுப்புச் சுவர் கட்டி - (இதற்கு Dykes டக்ஸ் என்று பெயர்) நாட்டைக் காத்தவர்கள். தடுப்புச் சுவரில் சின்ன துவாரம் வந்ததைக் கண்டு அந்நாட்டுச் சிறுவன் ஒருவன் தனது சகோதரி சென்று உதவியுடன் திரும்பும்வரை தனது கை விரலால் அடைத்துக் காத்தக் கைதயை நம்மில் பெரும்பாலோர் பள்ளிப் புத்தகங்களில் படித்திருக்கின்றோம்.

  இதே கடல்கோள நம்முன் “சுனாமி" எனும் பேரலையாக வடிவெடுத்து 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி அன்று இந்தோனேஷி’யாவில் சுமத்ரா தீவில் இருந்து தாய்லாந்து மலேஷியா, இந்தியா, இலங்கை, மாலைத் தீவுகள் வழியாக ஆப்ரிக்கா கண்டத்தில் ஸோமாலியா வரை ஆட்டிப்படத்தை அக்ரமத்தைப் பார்த்தோம்.

  “சுனாமி" என்பது ஜப்பானிய மொழியில் “துறைமுகத்தில் உண்டாகும் பேரலை" என்று பொருள். சாதாரணமாக நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் கடல் கொந்தளிப்புதான் “சுனாமி" உண்டாவதற்குக் காரணம். நிலநடுக்கத்தின் தாக்கமாகக் கடலின் அடிப்பகுதியில் உண்டாகும் ‘எனர்ஜி" (Energy) வேகமான ராட்சத அலைகளை உண்டாக்குகின்றது. இவ்வலைகள் உயர்ந்த மதிற்சுவர்கள் போல் காட்சியளித்து சுமார் 700 மைல் வேகத்தில் கரையில் மோதும் பொழுது பேரழிவை உண்டு செய்கின்றன. வரும் அதே வேகத்துடன் பின்னோக்கிச் செல்வதால் கரையில் இருக்கும் அனைத்தையும் அடித்துச் செல்கின்றன. பசிபிக், அட்லாண்டிக் கடல் பகுதிகளில் அதிகம் உண்டாகும் சுனாமி இந்தியப் பெருங்கடலில் இதுவே முதன் முறையாக உண்டாக்கியிருக்கின்றது. இதன் கோரப் பிடியில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்கள் எத்தனை இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதை நாம் கண்கூடாகப் பார்த்தோம். இத்தனைக் காலம் மக்களது பசியைப் போக்கி வந்த கடல் தனது கோரப் பசிக்கு மக்களையே கொண்டது. கந்து வட்டிக்காரனுக்கும் கடலுக்கும் வித்தியாசமில்லாமல் செய்விட்ட இந்த “சுனாமி"!!

  பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பனவற்றில் சாதாரணமாக நீரையும் நிலத்தையும்தான் அதிகப் பொறுமை என்று சொல்வார்கள். “பூமாதேவியைப் போல் பொறுமை" என்றும் கூறுவார்கள். நாம் கடலில் கரைப்பது பிள்ளயார் முதல் அஸ்தி வரை!! “சாத்திரம் பார்க்காத வீடு சமுத்திரம் போல" எனும் ஒரு வழக்கு உள்ளது. எல்லாம் சரி சரியென்று ஏற்கும் குடும்பம் பொறுமையில் சமுத்திரத்திற்கு ஒப்பானது என்று பொருள். இத்தனைக் காலம் நாம் எறிந்த அத்தனைப் பொருட்களையும் ஏற்ற சமுத்திரம் இப்பொழுது நமக்கு வேண்டிய அனைத்தையும் அடித்துச் சென்று விட்டது. இத்தனைக் காலம் நாம் கழுத்தில் அணிவதற்கு “முத்துக்களை" ஈன்ற கடல் எத்தனையோ குடும்பத்துச் சொத்துக்களை - குழந்தைகளை எடுத்துக் கொண்டு சென்று விட்டது.

  2004-ஆம் ஆண்டின் சுனாமியால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் கிட்டத்தட்ட இரண்டேகால் லட்சம் என்று கணக்குக் கூறுகின்றனர்!! நில நடுக்கத்தையும் கடல் கொந்தளிப்பையும் நாம் நிறுத்தி வைக்க இயலாது. ஆனால் உயிர்ச்சேதம் இத்தனை அளவு இல்லாமல் பாதுகாப்பு செய்து கொள்ளலாமே!!

  கடலோரப் பகுதிகளில் புதிதாக வீடுகள் கட்ட அனுமதி வழங்காமலும் கடலோரப் பகுதிகளில் கடலையே நம்பி வாழும் மக்களுக்குச் சற்று உயரமான பகுதிகளில் வீடுகள் கட்டியம், இந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட அத்தனை நாடுகளும் இனி ஏற்பட இருக்கும் அழிவைத் தடுத்துக் காக்கலாம். உறாலந் நாட்டைப் போல் தடுப்புச் சுவர்கள் கட்ட வேண்டாம். கடலோரப் பகுதிகளில் தென்னை, சவுக்கு போன்ற மரங்கள அதிகமாக நடலாம். சுனாமியின் வருகையை முன்கூட்டியே அறியும் ஆய்வு மையங்கள அமைக்க அமெரிக்காவுடன் தெற்கு ஆசிய நாடுகளும் சிந்திக்கலாமே!

  பஞ்ச பூதததால் ஆன மனித உடல் பஞ்ச பூதங்களில்தான் கடசியில் அடக்கம். இது எல்லா மதங்களும் ஏற்றுக் கொள்ளும் உண்மை. தமிழநாட்டில் சுனாமியால் எத்தனையோ கட்டிடங்களும் வீடுகளும் தரை மட்டமான போதும் கூட திருச்செந்தூர்கோவில், சென்ன சாந்தோம் தேவாலயம், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோவில், விவேகானந்தர் ப்£ற, வள்ளுவர் சில மற்றும் காவிரிபூம்பட்டினத்தின் கண்ணகிக் கோட்டம் இவைகளெல்லாம் சிறுசேதமுமின்றி நிலைத்திருக்கின்றன. இவை அனைத்தும் நம பிரார்த்தனைக் கூடங்கள்!! இங்கு ரீங்காரம் செய்யும் நம பிரார்த்தனைகள், ஜபங்கள், மந்திரங்கள் அனைத்தும் கொந்தளிக்கும் கடலையும் அடக்கக்கூடிய சக்தி வாய்ந்தவ என்று நமக்குப் புரிந் தெரிகிறதல்லவா! வேறுபாடுகள மறந் அவரவர்க்குப் பழக்கப்பட்ட முறைகளில் இப்பிரார்த்தனைக் கூடங்களில் இறைவனைத் தொடர்ந்து வேண்டி உலகம் நலத்தோடு வாழப் பிரார்த்திப்போமாக!

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com