
ஏதோ நினைவுகள்!!
(பகுதி 1)
இலண்டன் மாநகருக்கு ஒரு மாத விடுமுறைக்காக நானும் என் கணவரும் வந்திருக்கின்றோம். இம்மாதம் அபிராமி இதழுக்கு என்ன எழுதலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். காஸெட் பிளேயரில் கே.ஜே.ஏசுதாஸ் அவர்களின் ஐயப்ப பக்திப் பாடல்கள் எனும் (ஒலி நாடாவை) காஸெட்டைப் பொருத்தி இசைக்கச் செய்தேன். "குழல் ஊதும் குருவாயூர் கண்ணனே" எனும் இனிமயான பாடல் ஒலித்தது. செம்பனார் கோயில் சண்முகம் எனும் கவிஞரின் பாடலுக்கு ஜேசுதாஸ் அவர்களின் குழலினும் இனிமையான குரலைக் கேட்கும்போது எனக்குப் பல நினவுகள். அவை என் மனதில் மோதுகின்றன. செம்பனார் கோயில் சண்முகம் எங்கள் சிகால் (SICAL) எனும் சௌத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி புரிந்தவர். அவரரது எளிமையான கருத்து ஆழமிக்கப் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ஒரு முறை எங்கள் இல்லத்திற்கு அவர் வந்த போது அவர் எழுதி, சம்பத் செல்வம் இசை அமைத்து ஜேசுதாஸ் அவர்கள் பாடிய பல பாடல்களின் ஒலி நாடாக்களை அவரே எனக்குத் தந்தார். அதில் இந்த ஐயப்ப பக்திப் பாடல்கள் எனும் ஒலிப் பேழயும் ஒன்று. சண்முகம் அண்ணனிடம், ஜேசுதாஸ் அவர்கள் எத்தனயோ பக்திப் பாடல்களப் பாடியிருக்கின்றார். ஆனாலும் குழல் ஊதும் குருவாயூர் கண்ணனே எனும் பாடல் மட்டும் எல்லாவற்றையும் விட அதிக உருக்கமாகவும் கேட்பவர் மனதைத் தாக்கக்கூடிய வகையிலும் அமைந்திருக்கின்றதே? என்றேன். உடனே அவர் “குருவாயூர் கோயிலுக்குள் அவரை அனுமதிப்பதில்லை அம்மா. அந்தத் தாக்கம் அவரைக் காட்டிலும் எனக்கு அதிகமாக இருந்தது. உடனே இந்தப் பாடலை எழுதினேன். “சமதர்மம் நிலையாகும் உன் ஆலயம். சகலருமே வணங்கிடும் பொது ஆலயம். ஒரு முறை இது சமயம் நிறைவுடன் துதித்திடவே வரம் தர வேண்டுகின்றேன் குருவாயூரப்பா கோபாலா!" எனும் வரிகளை எழுதினேன். அதை அவரும் அதிக உணர்ச்சி வசப்பட்டுப் பாடினார்" என்றார். சில நாட்களுக்குப் பிறகு “பழய சீவரம்" எனும் ஒரு அழகான தலம். குன்றின் மீது அமைந்திருக்கும் லக்ஷமி நரசிம்மர் திருக்கோயில். அங்கு ஒரு இளம் துறவியைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவரிடம் பல விஷயங்கள் பேசும் போது இப்பாடலைப் பற்றிக் கூறி, கோயில்களில் மதத் தலைவர்களான நீங்கள் எல்லோரும் சமதர்ம நிலைய உண்டாக்கக் கூடாதா?. குருவாயூரில் ஜேசுதாஸுக்கு தரிசனம் ஏற்பாடு செய்யக் கூடாதா? என்றேன். அதற்கு அவரும் “சமதர்ம நிலை என்பது நடைமுறைக்கு அப்பாற்பட்டது. சமதர்ம மத்ரேயம் என்பதுதான் சாத்தியமான நிலை என்று கூறினார். அதாவது பல மதங்களுக்கிடையேயும் நட்பு நிலவ வேண்டும். மற்ற மதங்களைப் பொறுத்த வரை நமக்கு சகிப்புத் தன்மை இருக்க வேண்டும். பொறுமை வேண்டும். அப்பொழுதுதான் அமைதி நிலவும். இத்தனை இளையவர். சின்னவர். எத்தனை பெரிய விஷயத்ததுக் கூறுகின்றார் என்று நான் வியப்பில் ஆழ்ந்தேன். சம தர்ம நிலை அதாவது அனைத்து மத தர்மங்களுக்கும் ஒரே மாதிரியான கோட்பாடுகள் என்று நாம் நினப்பது உணர்ச்சி வசமான நிலை (Emotional Attitude). சமதர்ம மத்ரேயம் அதாவது அனைத்து மத தர்மங்களுக்கிடயே நட்பு நிலை என்பதுதான் நடைமுறைக்கு ஏற்றது (Practical Attitude) என்று புரிந்து கொண்டேன்.
இது நடந்தது மார்ச் மாதம் 20ஆம் தேதி 1994ஆம் ஆண்டு. அதாவது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு. ஒரு குறிஞ்சிப்பூ பூத்திடும் காலம் இடையில் சென்றிருக்கின்றது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு அந்தப் பாடலக் கேட்டவுடன் இந்த நினைவுகள் எனக்கு எப்படி வந்தது? நினைக்கத் தெரிந்த மனம் படைத்தவன் மனிதன் மட்டுமே என்பதால்தானோ?
|