• அண்ணாமலையாருக்கு ஒரு அற்புதத் தேர்

  பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னித் தலமாகத் திகழ்வது திருஅண்ணாமலை. அக்னி கர்ப்பம் தாங்கிய மலை திருவண்ணாமலை. கைலாய மலை சிவனின் இருப்பிடமாகவும் மேரு மலை தேவியின் இருப்பிடமாகவும் திகழ்கின்றபோதும் திருவண்ணாமலையானது சிவலிங்கமாகவே திகழ்கின்றது. வழிபாட்டின்போது நாம் இறைவனை ஆவாஉறனம் செய்துதான் வழிபடுகின்றோம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்தோ, குடத்தில் நூலைச் சுற்றித் தேங்காய், மாவிலை வைத்தோ ஆவாஉறனம் செய்து வழிபடும் நமக்கு என்றுமே ஆவாஉறனம் செய்த வடிவில் அண்ணாமலையார் அக்னி மலை வடிவில் திகழ்கின்றார்.

  கம்பீர மௌனமாகவும் மௌன கம்பீரமாகவும் திகழும் அண்ணாமலையாருக்கு மலை அடியில் ஒரு அழகான கோயில். சுயம்புவான அக்னி லிங்கம். அருணாசலேஸ்வரருக்கு ஏறத்தாழ 25 ஏக்கர் பூமியில் இன்று திகழும் திருக்கோயிலில் நம் உடம்பின் ஒன்பது வாசல்களை வலியுறுத்தும் வண்ணம் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அண்ணாமலையாரது ஸன்னதியில் நின்று பார்த்தால்தான் “அக்னி கர்ப்பம் தாங்கியவன், அக்னித்தலம்" என்றெல்லாம் சொல்வதன் உண்மை புரியும். அழகே வடிவாக, சின்னஞ்சிறு பெண்போல் காட்சியளிக்கும் உணணாமுலை அம்மனுக்குத் தனிச் சன்னதி. தாயின் குளிர்ச்சியில் தந்தையின் சூடுதனைத் தணித்துக் கொள்ளலாம்!!

  கார்த்திக தீபத்தன்று கூடும் பக்தர்கள் மாதந்தோறும் பௌர்ணமிக்குக் கிரிவலம் வரும் பக்தர்கள் என்று இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பல லட்சம். இவர்கள் அத்தனைப் பேரின் பக்தியில் பிறந்ததுதான் 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-ஆம் தேதியன்று கோவிலில் வெள்ளோடடம் விடப்பட்ட தங்கத்தேர் எனும் குழந்தை.

  ஆகஸ்ட் மாதம் தொடங்கி மயிலாடுதுறையில் A.R.C. எனும் நகைக்கடை ஆசாரிகளின் கைவண்ணத்தில் உருவான மரத்தேர் நவம்பர் மாதம் 23-ஆம் தேதியன்று கோவிலில் ஒப்படைக்கப் பெற்றது. மரத்தேரின் கைங்கர்யத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டவர்கள் கோட்டயூரைச் சேர்ந்த மெ.க.வைகயறா எனும் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சமூகம். கோவிலில் ஒப்படைக்கப்பெற்ற மரத்தேருக்குத் தங்கவேலை செய்து அழகு தங்கத்தேராக ஒப்படைத்தவர்களும் மயிலாடுதுறை A.R.C. நகக் கடையினரே !!

  சக்கர அச்சாணியிலிருந்து கலசக் குடை வரை தேரின் உயரம் பதினாறே முக்கால் (16-3/4) அடியாகும். தேரின் அடித்தளம், குதிரைகள், குதிரையச் செலுத்தும் பிரம்மன் ஆகியவை மட்டும் வெள்ளி. மற்றது அனைத்தும் தங்கம். தேர் சதுர்க் கோணமாக அமைந்துள்ளது. அதாவது நான்கு தூண்கள் கொண்ட சதுரமான பீடம் அமைந்துள்ளது. கீழ்ப் பட்டையில் பிரம்மாவிற்கும் பின்னால் அன்னப் பட்சிகள், அதன் இருபுறமும் விநாயகர், முருகர், சிற்பங்கள். அடுத்த பட்டையில் முறையே வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பின்பட்டையில் சரபேஸ்வரர், லிங்கோத்பவர், நடராஜர் மற்றும் நான்காவது பட்டையில் கஜசம்உறாரமூர்த்தி, ரிஷபாரூடர், ஏகபாதர் என்று சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பட்டை மீது பல இதழ்கள் கொண்ட தாமரைத் தளங்கள் இரண்டு உள்ளன. தாமரை தளத்தின் மீது சதுர பீடம் நான்கு மூலைகளிலும் நான்கு தூண்கள் என்று அமைந்திருக்கின்றன. தூண்களின் மீது மூன்று தள விமானம். இதனைக் கண்ணாடிக் கூடம் என்று ஸ்தபதிகள் கூறுகின்றனர். அதன் மீது பண்டியர் தகடு, மற்றும் மஉறாபத்மம். அதன் மீது கலசம். கலசத்தின் மீது குடை. குடையில் முப்பத்தாறு அரச இலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விமான தளத்தின் அடியில் நான்கு பக்கமும் ரச குண்டுகள் எனப்படும் மணி தொங்குவது அழகுக்கு அழகு செய்வது போல் அமைந்துள்ளது.

  இவ்வழகுத் தேர் சம்பிரதாயப்படி 16.3.2006 அன்று வெள்ளோட்டம் விடப் பெற்றது. ஸ்வாமி சன்னதியில் அன்று காலை 8 மணிக்கு ஏகாக்னி பூஜை என்று ஒரே ஒரு குண்டமிட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, அருள்மிகு உண்ணாமுலை அம்மன் உடனுறை அருள்மிகு அண்ணாமலையார் கும்பவேதிகை பூஜை, யாக பூஜை அனைத்தும் நிகழ்த்தப்பெற்ற. இதன் பின்னர் ஸ்தபதிகள் பூஜை செய்து கும்பத்தைத் தேர்மீது வைத்துத் திருக்கோவில் பிரகாரத்தில் வெள்ளோட்டம் விட்டு மீண்டும் கோவிலில் தேரை ஒப்படைத்தனர். இதனை ‘தச்சு கழித்த பூஜை செய்த வெள்ளோட்டம்" என்கின்றனர். ஸ்தபதிகள் வெள்ளோட்டம் முடிந்தபிறகு 9 மணிக்கு பூர்ணாஉறதி, தீபாராதனை நடைபெற்று, மங்கள வாத்தியங்களுடன் கலசங்கள் கொண்டு வரப்பெற்றுத் தேருக்கு அபிஷேகம் செய்யப் பெற்று தீபாராதனை நிகழ்ந்தது. அரை மணி நேரத்திற்குள் அருள்மிகு சந்திரசேகரர் அலங்கரிக்கப் பெற்று ரதத்தில் எழுந்தருள தீபாராதனை நிகழ்ந்தது. திருக்கோலத்தில் ஸ்வாமி அம்மன் தேர்மீது பவனி வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அண்ணாமைலயாருக்கு அரோஉறரா" என்று உறரகோஷம் எழுப்பிய மெய்சிலிர்க்கச் செய்தது. சூரிய ஒளியில் தேர் ஜொலித்ததைக் கண்ட பக்தர்கள் “தேருக்கு மின்சார ஒளி எதற்கு, சூரியன மிஞ்சிய ஒளியா?" என்றனர்.

  இந்தத் தேரைப் பற்றிய சில விவரங்கள் சிவன் கோவிலில் ஸ்வாமிக்கு என்று முதலில் செய்யப்பட்ட தேர் இதுதான் என்கிறார்கள். மற்ற கோவில்களில் அம்பாளுக்குத் தேர் உள்ளதென்றும் கூறுகிறார்கள். மயிலை கபாலி கோவிலில் கற்பகாம்பாளுக்குத் தேர், காஞ்சியில் காமாட்சிக்குத் தேர், மாங்காட்டில் காமாட்சிககுத் தேர் என்றும், வைத்தீஸ்வரர்கோவில், திருத்தணி, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோவில்களில் முருகனுக்குத் தேர் உண்டு. பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமான திருஅண்ணாமலையில் மட்டுமே முதலாவதாக ஸ்வாமிக்குத் தங்கத் தேர் அமைக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாட்டில் மிகவும் உயரமான தங்கத்தேர் திருத்தணியில் உள்ளது. இரண்டாவது திருஅண்ணாமலைத்தேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  தங்கத்தேர் அழகாக ஆடி அசைந்து பவனி வரும்போது என் மனதில் ஒரு ஆசை எழுந்தது. அக்னித் தலத்தில் அமைந்தது போல் மற்ற பஞ்ச பூதத் தலங்களிலும் (திருவானக்கா-ஜம்புகேஸ்வரம், காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில், காளஉறத்தீஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்) தங்கத்தேரில் ஸ்வாமி அம்மன் பவனி வருவதைப் பார்ப்போமா எனும் ஆசைதான் அது!! சிவனும் தேவியும் நம் ஆசைய நிறவேற்றாமலா இருக்கப் போகிறார்கள். வாருங்கள் பிரார்த்தனை செய்வோம், நலமே பெருகும், சிவமே திகழும்.

  இக்கட்டுரை எழுதப் பல செய்திகள் தந்து உதவிய A.R.C. நிறுவன ஸ்தபதிகள், கார்ன் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் ஜெனரல் எண்டர்பிரசைஸ் என்கிற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் N.ராமலிங்கம், சிதம்பரம் நடராஜர் கோவில் அப்பாத்துரை தீக்ஷ¤தர், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன அதிகாரி எம்.ஆர்.ராமசாமி, ஓவார் பாலசந்திரன் மற்றும் புகைப்படங்கள் தந்துதவிய ஸ்பிக் வேலூர் மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் திட்ட உதவியாளர் ஆர்.முருகன் ஆகியோருக்கு என் நன்றி.

  மயிலாடுதுறை A.R.C. எனும் நிறுவனம், தமிழ்நாட்டில் 18 தங்கத்தேர்களையும் 30-க்கும் மேல் வெள்ளித்தேர்களையும் செய்திருக்கின்றார்கள். சிங்கப்பூர் ஸ்ரீதண்டாயுதபாணி கோவிலுக்கும், மலேசியா ஸ்ரீமாரியம்மன் கோவிலுக்கும் தங்கத் தேர்களைச் செய்திருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com