• கங்கையின் மைந்தன்

    பாரதநாடு எனும் புண்ணிய பூமியில் புரண்டோடும் நதிகளில் வற்றாத ஜீவ நதியாகும் கங்கை.

    நாம் மட்டும் நமது நாட்டையும், நதிகளையும் பெண்பாலாகக் கரும் வழக்கம் கொண்டுள்ளோம்.

    பாரதமாதா நம் தாய்த்திருநாடு. கங்கா, யமுனா, சரஸ்வதி, கிருஷ்ணா, காவேரி, துங்கபத்திரா, கோதாவரி என்ற பெண்பால் பெயர்கள் கொண்டவை நமது நதிகள். இதில் பிரம்மபுத்திரா மட்டும் விதி விலக்கு. காரணம் இந்நதியின் பிறப்பிடம் பாரதம் அன்று.

    ஸப்த புண்ணிய நதிகளில் தலையாயது கங்கை நதி. கங்கையில் மூழ்கி எழுந்தால் நமது பாவங்கள் அனைத்தும் கழுவப் பெறும் என்பது வேத புராணங்களும், இதிகாசங்களும் கூறும் கருத்து. நம் பாவங்கள் அனைத்தையும் தான் வாங்கிக் கொண்டு தனது புனிதம் மட்டும் சிறிதும் மாறாமல் என்றும் ஜீவ நதியாகத்தான் கங்கை பாரத பூமியில் புரண்டோடுகின்றாள். காசி அல்ல வாரணாசி எனப் பெறும் மஉறா க்ஷத்திரத்திற்குச் சென்றால், அங்கு நிகழ்வதது காணும்போது அவை நம்மை வியப்பில் ஆழ்த்தும். அங்கு மணிகர்கணிகா காட் எனும் துறையில் சிவபதவி அடைந்தோரின் பூத உடல்கள் அக்னி மூட்டப்பட்டு முக்கால்வீதம் எரிந்த நிலையிலேயே கங்கையினுள் தள்ளப் பெறுகின்றன. எத்தனையோ உடல்கள் முக்கப் பெற்றும் கங்கையில் சிறிதும் துர்நாற்றம் வீசுவதில்லை. கங்கையின் நீர் கலசங்களில் அடைக்கப் பெற்று பல ஆண்டுகள் வரை வைத்திருந்தாலும், அந்நீர் கெடுவதில்லை. விஞ்ஞானிகள் இதற்குக் காரணம் கங்கை ஆற்றில் ஒரு விதமான பாசி (Algae) விளைவதாகவும், இந்தப் பாசி நதியில் கலக்கப் பெறும் அத்தனைக் கழிவுகளையும் அப்புறப்படுத்தி நீரத் தூய்மையாக வைத்து இருக்கும் சக்தி கொண்ட பொருளாக அமைகிறது என்றும் கூறுவர்.

    கோடானுகோடி மக்களின் பாவங்களைச் சுமந்தாலும் தனது தூய்மை சிறிதும் மாறாத கங்கை எந்தப் புனித பெற்றோரின் மகள். என்னை வியப்பில் ஆழ்த்திய கங்கையின் பிறப்பு பற்றிய எண்ணம்தான் “அன்னை தேவி கங்கையே" எனும் கவிதையாக உதித்தது. அமுதசுரபியில் ஏற்கனவே வெளிவந்த கவிதையை மீண்டும் அளிக்கின்றேன்.

    அன்னை தேவி கங்கையே, எங்கிருந்து நீ வருகின்றாய்
    புல்லரையும் புனிதமாக்கும் நீ எந்தக் கருவியில் உருவானாய்
    இமயமலைச் சாரல்தான் உன் பிறப்பிடம் என்று கூறினால்
    இமவான்பெற்ற மகள் பார்வதி தேவி நீதானே
    திருமால் பாதம் கழுவிய தீர்த்தம் நீயே என்றுரத்தால்
    சீர்மேவும் அவன் திருவடியில் உதித்த திருமகளும் நீதானே
    பகீரதனின் பிரார்த்தனையால் பாய்ந்தாய் மண்ணீல் நீ என்றால்
    பார்புகழ் ஆண்மகன் அவன் பெற்ற பண்புடை மகளும் நீ தானே
    உன் பிறப்பு பலருக்கும் புரியாப் புதிராய்த் தோன்றிடினும்
    உலகில் உத்தம பிரம்மச்சர்யன் என்றே உதாரண புகழ் பெற்ற
    பீஷ்மாச்சார்யர் அவர் தன்ன ஈன்ற தாயும் நீயன்றோ
    படைப்புக்களின் பாவங்களனைத்தும் பொருட்படுத்தாமல் நீ சுமக்கின்றாய் உன் தூய்மையை மட்டும் அனைவருக்கும் விலைகூறாமல் வாரி வழங்குகின்றாய
    உலகில் உன்னையும் மிஞ்சிய கருணைத்தாய் வேறு யாரம்மா?

    இமயமலையில் உதித்த கங்கை பெரும் இறுமாப்புடன் கரைபுரண்டோடிக் கொண்டிருக்கிறாள். 100 அஸ்வமேத யாகங்கள நடத்தினால் இந்திர பதவி கிடைக்கும் என்பதால் பகீரதன் முன்னோர்கள் அஸ்வமேத யாகங்கள நடத்கினறார்கள். அந்த யாகத்தை நிறைவு பெறாமல் செய்வதற்காக, அஸ்வத்த (குதிரையை) கபில மகரிஷியிடம் கொண்டு பாதாளத்தில் கட்டி வைத்துவிடுகின்றனர். சத புத்திரர்கள் என்று 100 பேரான பகீரதனின் முன்னோர்களையும் பஸ்பமாக்கி விடுகின்றனர். பஸ்பமாக்கிவிட்ட முன்னோர்கள உயிர்ப்பிக்க கங்கையைக் கொணர வேண்டும் என்பதனால் பகீரதன் சிவபெருமான நோக்கிக் கடுந்தவம் புரிகின்றான். கங்கையை ஆகாயத்தினின்று நேரடியாக பூமிக்கு வரவழைத்தால் அவளது வேகத்தை பூமி தாங்க இயலாது என்பதால் சிவபெருமான் அவளைத் தனது தலையில் வாங்கி பூமியில் பாய விடுகின்றார். அவள் பூமியில் பாய்ந்து ஓடும் பொழுது ஜன்னி முனிவர் என்பவர் யாகம் வளர்த்க் கொண்டிருக்க அவளது வேகம் யாகத்தைப் பழுது செய்து விடும் என்று அஞ்சி, கங்கய ஜன்னு முனிவர் குடித்து விடுகின்றார். பகீரதன் இத்தனைப் பிரயத்தனம் கொண்டு கொணர்ந்த கங்கையை மீண்டும் புவியோருக்குத் தர வேண்டும் என்று பிரார்த்திக்க ஜன்னு முனிவர் கங்கையை வலது காதிலிருந்து வெளியில் பாயச் செய்கின்றார். புவியோர் அனைவரது வலது காதுகளிலும் கங்கை இருப்பதாக இன்றும் ஐதீகம். அதனாலேயே பூஜை, ஹோமம் ஆகியவை செய்யும்போது தும்மலோ, கொட்டாவியோ வந்துவிட்டால், அந்த அசுத்தம் நீங்க பூஜை செய்வோர் வலது காதைத் தொட்டுக் கொள்வர். அதில் இருக்கும் கங்கை புனிதம் தந்துவிட்டதாக ஐதீகம். இவைகளே கங்கையின் சிறப்பைப் பற்றிய புராணச் செய்திகள். இக்கருத்க்களை மனதில் கொண்டு எழுதியதான் மேற்கண்ட எனது கவிதை.

    புனித கங்கை ஈன்றெடுத்த மைந்தன்தான் பாண்டவர்களும், கௌரவர்களும “பிதாமகர்" என்று பெரும் மரியாதையுடன் அழைத்த பீஷ்மாச்சார்யர். ஆன்மீகப் பற்றுடயோர் அனைவருக்கும் “விஷ்ணு சஹஸ்ரநாமம்" எனும் உயர்ந்த மந்திரத்தை ஈன்றவர். இவரது பண்புகள் சர்ச்சைக்கு உரியன என்றாலும், என் மனதை வெகுவாகப் பாதித்தவை.

    சந்திர வம்சத்தில் வயாக்ரபாத கோத்திரத்தில் பிரஸித்தி வாய்ந்த சந்தனு மன்னருக்கும், கங்காதேவிக்கும் பிறந்த எட்டாவது மைந்தன்தான் தேவவிரதன். காங்கேயன், கங்காதத்தன் என்றெல்லாம் பெயர் கொண்டு பின்பு பீஷ்மன் என்று அழைக்கப் பெற்ற பீஷ்மாச்சார்யார் -பிதாமகர்.

    அழகே உருவான கங்காதேவி பிரம்மதேவனின் சபைக்குள் வருகின்றாள். தான் செய்த தவ வேள்வியின் பலனாக, அச்சைபயில் மகாபிஷக் என்னும் மன்னனும் இருக்கின்றான். மெல்லிய காற்று வீசியதால் கங்காதேவியின் மேலாடை கலந்தது. இக்காட்சியைப் பார்க்கக்கூசி தேவர்கள் அனைவரும் பூமியைப் பார்க்க, மகாபிஷக் மன்னன் மட்டும் கங்காதேவியின் அழகில் மயங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பிரம்மதேவன் மகாபிஷக்க நோக்கி, “நீ பூமியில் போய் பிறப்பாய். இவளே உனக்கு மனைவியாவாள். நீ விரும்பாத செயல்கள இவள் செய்வாள். நீ சினந்து அவளை செயலுக்குக் காரணம் கேட்டாயானால், அவள் உன்னை விட்டு பிரிந்து செல்வாள். நீயும் சாபத்திலிருந்து விடுபடுவாய் என்று சபித்தார். மகாபிஷக் தான் சந்தனு மன்னனாக பூமியில் அவதரித்தார். அவரது மனைவியாக கங்காதேவி அவதரித்தாள். இதற்கிடையில் வசிஷ்ட முனிவரின் ஆஸ்ரமத்தில் நந்தினி என்ற பசு ஒன்று இருந்தது. அஷ்டவசுக்கள் ஆசிரமத்திற்கு வந்தனர். வசுக்கள் என்றால் அரச அந்தஸ்தின உடைய தேவதைகள் என்று பொருள். அதில் எட்டாவது வசுவான ப்ரபாசன் என்பவனின் மனைவி அவனை நச்சரித்து நந்தினியைத் திருடித் தரச் சொல்கிறாள். ப்ரபாசன் மற்ற ஏழு வசுக்களின் உதவியோடு நந்தினியைத் திருடி, வேறு ஒரு முனிவரின் மகளிடம் கொடுக்கிறான். நந்தினியைத் திருடிய எட்டு வசுக்களும் வசிஷ்டரின் சாபத்திற்குப் பாத்திரமாகின்றார்கள். உதவி செய்த ஏழு பேர், ஒரு வருட காலத்திற்கு மட்டுமே உலகில் வாழ்ந்து சாப விமோசனம் பெறுவார்கள். மனைவியின் பேச்சக் கேட்டு திருட்டுக்கு உடைந்தயாகிய ப்ரபாசன் மட்டும் பூமியில் நீண்ட காலம் வாழ்வான். தர்மாத்மாவாகவும், சாஸ்திரங்களில் வல்லமை பெற்றவனாகவும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் மிகுந்த ஊக்கமுடையவனாகவும் இருப்பான். பெண்ணின் ஸ்பரிசத்தையே ஒக்கி உயர்ந்த பிரம்மச்சாரியாக வாழ்வான் என்பது சாபம்.

    எட்டு வசுக்களும் தங்களை சாபத்திற்கு விமோசம் கேட்டு கங்கையை வேண்டி பூவுலகில் அவளே தமக்குத் தாயாக வேண்டும் என்கின்றனர். கங்கைக்கும், சந்தனுவிற்கும் பிறந்த முதல் ஏழு குழந்தைகளும் முதல் ஏழு வசுக்கள். கங்கை சந்தனுவிடம் திருமணத்திற்கு முன்பாகவே நான் என்ன செய்தாலும் மன்னவன் எதற்கென்று கேட்கக் கூடாது. அவ்வாறு கேட்டால் நான் அவளை விட்டுப் பிரிந்து சென்று விடுவேன் என்றும் கூறி வரம் பெற்று இருக்கின்றாள். அந்த ஏழு வசுக்களின் பாப விமோசனத்திற்கான பகவானின் லீலயே இது. சந்தனு, கங்காதேவி தம்பதியர்க்கு வரிசயாக ஏழு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. அவை ஓராண்டு அடையும் தருணம் கங்காதேவி தானே அவர்களை அழைத்துச் சென்று கங்கை ஆற்றில் மூழ்க வைத்துத் கொன்றுவிடுகின்றாள். சந்தனு ஏனென்று கேட்கவே மாட்டான். எட்டாவது குழந்தையான தேவவிரதனை (முற்பிறவியில் ப்ரபாசன்) அழைத்துக் கொண்டு ஆற்றில் மூழ்கடிக்கப் போகும் சமயம், சந்தனு மன்னன் அவளைப் பார்த்து “எதற்காக நீ இவ்வாறு என் குழந்தைகளை வரிசயாக பிறக்கப் பிறக்க அழிக்கின்றாய். நீ யார்? என்று கேட்கிறான். கங்கையின் சாப விமோசத்திற்கும் உரிய நேரம் வந்விட்டது. ஆகையால் அவள் அனைத்து விவரங்களையும் கூறி, மன்னன் தன்னை கேள்வி கேட்டு விட்டதால்தான், அவனுடன் வாழ இயலாது என்று கூறி தேவவிரதனையும் அழைத்துக் கொண்டு கைலாயத்திற்குச் சென்று விடுகின்றாள். அங்கு பல ஆண்டுகள் தானே அவனது தாயாகவும், தந்தையாகவும் போற்றி வளர்க்கின்றாள்.

    முப்பத்தாறு ஆண்டுகள் கழித்து சந்தனு மன்னன் கங்கைக் கரையில் நடந்து செல்லும்போது ஆற்றில் வெகுக் குறைவாகத் தண்ணீர் ஓடுவதையும், இளஞன் ஒருவன் ஆற்றை தனது அம்புகளாலே அணை இட்டிருந்ததையும் பார்த்து, அவன் யாராக இருக்கும் என்று குழம்பிய நினையில், கங்காதேவி அவன் முன் தோன்றி, இவ்வீர இளஞன் வேறு யாருமல்ல. உன்னுடய எட்டாவது மகனான தேவவிரதன் தான். வேத சாஸ்திரங்களில் கரை கண்டவன். தனது அறிவால் சுக்ராச்சாரியாருக்கும், ப்ரஉறஸ்பதிக்கும் ஒப்பானவன். அஸ்திர சாஸ்திரத்த பராசுராமரிடமிருந் முறையாகக் கற்றவன். இவனது அறிவிலும், வீரத்திலும் மிஞ்சுபவர் யாரும் இருக்க முடியாது. ஒரு பெண் வளர்த்த வீரன நீ தற்போது அழைத்துக் கொண்டு செல்லலாம். அதற்கு நேரம் வந்து விட்டது என்று கூறி தேவவிரதன சந்தனுவிடம் ஒப்படத்விட்டு மீண்டும் கங்கை கைலாயத்திற்குச் சென்று விட்டாள்.

    தேவவிரதனை ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்து வந்து சந்தனு அவனுக்கு யுவராஜன் என்று பட்டாபிஷேகம் செய்துவித்து வாழ்ந்தான். நான்கு ஆண்டுகள் சென்றபின் யமுனையாற்றின் கரையில் வேட்டையாடச் சென்ற மன்னன், அழகான செம்படவப் பெண்ணான சத்தியவதியை கண்டு, மோகம் கொண்டு அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி, அவளை தகப்பனாரிடம் சென்று முறையாகக் கேட்டான். செம்படவ மன்னனோ, அரசே உம்மைவிட உயர்ந்த கணவன் என் மகளுக்குக் கிடக்க இயலாது. இருப்பினும் நான் உம்மிடம் ஒரு வரம் கேட்பேன். உமக்கு ஏற்கனவே பட்டத்திற்கு ஒரு மகன் இருக்கின்றான். அவன விடுத் என் மகள குழந்ததான் உம ராஜ்யத்த ஆளவேண்டும். இந்த சத்தியத்தை நீர் செய்து கொடுத்தால் என் மகளை உமக்கு மண முடிப்பேன் என்றான். சந்தனு மன்னனும் மனம் குழம்பி வீடு திரும்பினான். அவனை வாட்டத்தையும், சோகத்தையும் கண்டுணர்ந்த தேவவிரதன், தேரோட்டி மூலமாக செய்தியறிந்து சத்தியவதியின் தகப்பனாரிடம் சென்றான். அவனிடமிருந் விவரங்கள் அனைத்தயும் தெரிந்து கொண்டான்.

    செம்படவ மன்னனிடம் அருள்கூல்ந்து உங்கள் மகளை என் தந்தைக்கு மணமுடித்து எனக்குத் தாயாக்குங்கள் என்கின்றான். செம்படவனோ “இளவரசே இந்தத் திருமணத்திற்கு முதல் எதிரி தாங்கள்தான். நீங்கள் இருக்கும்போது உங்களைப் பகைத்துக் கொண்டு என் பேரன் எப்படி மன்னனாக இயலும்? அப்படியே ராஜ்யத்தை நீங்கள் விட்டுக் கொடுத்தாலும் உங்களுக்குப் பின் உங்கள் மகன்கள் இதற்கு ஒத்துக் கொள்வார்களா? என்று கேட்கின்றான்.

    உடனே தேவவிரதன் தாயால் மட்டும் போற்றி வளர்க்கப்பட்ட நான், அந்தத் தாய் மீது ஆணையாகச் சொல்கின்றறேன். உங்கள் மகளின் வாரிசை மட்டுமே ராஜ்யம் ஆளச் செய்வேன். நான் ராஜ்யம் ஆள மாட்டேன். நான் திருமணம் செய்து கொண்டு எனக்கு வாரிசுகள் பிறந்தால்தானே பிரச்சின. என் தந்தையின் விருப்பத்தை நிறவேற்றி வைப்பதொன்றே எனது இலட்சியம். அதற்காக நான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிப்பேன் என்று கூறுகின்றான். இவ்வாறு தேவவிரதன் கூறும்போது தேவர்களும், முனிவர்களும் அப்ஸர பெண்டிரும் “பீஷ்மா, பீஷ்மா" என்று கூறிக்கொண்டே அவன் மீது பூமழை பொழிந்தார்கள். பீஷ்மர் என்றால் தேவர்களும் முனிவர்களும் கூட கடைப்பிடிக்க இயலாத விரதத்தைக் கடைப்பிடிப்பவன் என்று பொருள். தேவவிரதன், கங்காதத்தன், காங்கேயன் என்று பல பெயர் கொண்டவர் அன்று முதல் “பீஷ்மர்" என்று அழைக்கப் பெற்றார்.

    பீஷ்மர் தனது தந்தைக்கும், சத்தியவதிக்கும் திருமணம் செய்வித்த போது சந்தனு மன்னன், “மகனே! ஒரு தந்தை மகனுக்கு ஆற்ற வேண்டிய கடைமயை நான் உனக்கு செய்யவில்ல. ஆனால் நீயோ ஒர மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமையை விட நூறு மடங்கு எனக்கு ஆற்றி விட்டாய். உன்னை மனமார நான் வாழ்த்கிறேன். நீ எதுவரை உயிர் வாழ விரும்புகின்றாயோ அதுவரை வாழ்வாய். மரணமும் கூட நீ விரும்பும்போதுதான் உன்னிடம் வரும் என்று கூறி வாழ்த்துகிறான்.

    பீஷ்மருக்கு பிறப்பினைத் தந்த தகப்பனே அவன் விரும்பிய போது இறப்பு என்ற வரத்தையும் கொடுக்கின்றான். பிறப்பால், வளர்ப்பால் உயர்வினை எட்டிய பீஷ்மரின் இறப்பிலும் பல உயர்ந்த தத்துவங்கள் உள்ளன.

    சந்தனு மன்னருக்கும் சத்தியவதிக்கும் சித்ராங்கதன், விசித்ர வீரியன் என்று இரு மகன்கள் பிறந்தனர். சந்தனுவின் மறைவிற்குப் பிறகு சித்ராங்கதனுக்கு பட்டம் சூட்டி பீஷ்மர் மன்னனாக்கினார். மூன்று ஆண்டுகள் அரசாண்ட பின் கந்தர்வன் ஒருவனால் சித்ராங்கதன் கொல்லப்பட்டான். இதன்பின் விசித்ர வீர்யனுக்கு பட்டாபிஷேகம் நடத்தி அவனை மன்னனாக்கினார் பீஷ்மர. பீஷ்மர் விசித்ர வீர்யனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். காசி மன்னரின் பெண்கள் மூவரான அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகியோருக்கு சுயம்வரம் நடக்கவிருந்ததை கேள்வியுற்று பீஷ்மர், சத்யவதியின் அனுமதி பெற்றுக் கொண்டு சுயம்வரத்திற்குச் சென்றார். அவரது நரைத்த முடியையும், தாடியையும் கண்டு பலர் அவரை எள்ளி நகையாடினர். வயதான பின், முடி நரைத்த பின் கல்யாண ஆசையா? பிரம்மச்சரிய விரதத்தை விட்டு விட்டீரா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டுத் துளைத்தனர். வெகுண்டெழுந்த பீஷ்மர் காசி மன்னரின் பெண்கள் மூவரையும் தேரில் ஏற்றிக் கொண்டு வந்து விட்டார். மூன்றுபெண்களில், அம்பா தான் சால்வன் எனும் மன்னனை விரும்புவதாகக் கூறவும் அவளை அனுப்பி வைத்துவிட்டு, மற்ற இருவரான அம்பிகா, அம்பாலிகா இருவரையும் விசித்ர வீர்யனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

    சால்வனிடம் சென்ற அம்பாவை அவன் ஏற்க மறுத்து விட்டான். தனது நிலைக்குக் காரணம் பீஷ்மர்தான் என்று கோபம் கொண்ட அம்பா, பீஷ்மரை எப்படியாகிலும் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று பரசுராமரை அவருடன் போர் செய்யத் தூண்டினாள். அதுவும் நிறைவேறவில்லை. பிறகு அம்பை இமயமலையில் 12 ஆண்டுகள் கடுமையாகத் தவம் புரிந்தாள். அதன் பலனாக முருகன் அவள் கையில் ஒரு தாமரைப்பூ மாலையைக் கொடுத்து இதனை அணிபவன் பீஷ்மரைக் கொல்லும் சக்தியைப் பெற்று அவரது மரணத்திற்குக் காரணமாவான் என்று கூறினார். பாஞ்சால மன்னன் ருபதனிடம் அடைக்கலம் புகுந்தாள் அம்பா. அவள் அங்கு தங்கினால், பீஷ்மரின் விரோதத்தை ஏற்க வேண்டியிருக்கும். அவரது எதிர்க்கும்சக்தி தமக்கு இல்லை. ஆகவே அம்மையை அங்கிருந்து போய்விடும்படி வேண்டினான் ருபதன். மனம் ஒடிந்து அம்பை தன் கையில் இருந்த மாலையை ருபதன் அரண்மனை வாயிலில் மாட்டிவிட்டுச் சென்று விட்டான். ருபதன் ஆரம்ப காலத்தில் அம்மாலையை கவனமாகப் பார்த்துக் கொண்டான். யாரும் அதனைத் தொடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பின்பு விட்டுவிட்டான். மாலைய விட்டுச் சென்ற அம்பை இறந்து, மறுபடிருபதனுக்கே மகளாகப் பிறக்கிறாள். பாகாப்பில்லாத மாலையை எடுத்து போட்டுக் கொண்டாள். விவரம் அறிந்த ருபதன் பீஷ்மரால் தனக்கு ஆபத்து வரும் என்று அஞ்சி தனது மகளான சிகண்டினிய அரண்மனையை விட்டு வெளியே அனுப்பி விட்டான். வெளியே சென்ற சிகண்டினி, ஸ்தூணன் என்ற கந்தர்வனின் உதவியால் ஆணாக மாறி சிகண்டி என்று அழைக்கப்பட்டான்.

    விசித்ர வீர்யனுக்கும் அம்பிகாவிற்கும் திருதராஷ்டிரன் எனும் மகன் பிறந்தான். அவன் பிறவியில் குருடு. விசித்ர வீர்யனுக்கும், அம்பிகாவிற்கும் பிறந்த மகன் பாண்டு. பாண்டு நோயினால் (வெண் குஷ்டம்) பீடிக்கப்படான் என்பthuம் மற்றொரு செய்தி. திருதராஷ்டிரன் காந்தாரியை மணந்தான். அவர்களுக்கு 100 மகன்களும், 1 மகளும் பிறந்தனர். இவர்களே கௌரவர்கள். இயல்பாகவே இவர்கள் கொடூரமான. பொறமைக்குணம் நிறைந்தவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களில் மூத்தவன் துரியோதனன். பாண்டுவிற்கு இரண்டு மனைவியர். குந்திக்கும் பாண்டுவிற்கும் தர்மர், பீமர், அர்ஜுனர் என்ற மகன்கள் பிறந்தனர். மாரிக்கும், பாண்டுவிற்கும் நகுலன், சகாதேவன் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். இந்த ஐவருமே பஞ்ச பாண்டவர்கள் ஆனார்கள். திருதராஷ்டிரன் பிறவிக்குருடன் என்பதால் பாண்டுவ பீஷ்மர் மன்னனாக முடி சூட்டினார். பாண்டு ரொம்ப காலம் வாழவில்லை. திருதராஷ்டிரரே மன்னனானார். பாண்டவர்கள் பெரிய தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். பீஷ்மருக்கு முறையால் எல்லோரும் பேரர்கள். அதனால் கௌரவர்களையும், பாண்டவர்களையும் அன்பு கலந்த பரிவோடு வளர்த்தார். துரோணர், துருவர் போன்ற ஆசாரியார்களிடம் அவர்களுக்கு வில்வித்தையைக் கற்றுத் தந்தார். அர்ஜுனன் ரோணரின் தலையாய மாணாக்கன் ஆனான். திளெபத நாட்டு மன்னனின் மகளான திரௌபதியின் சுயம்வரத்திலும் அர்ஜுனன் தனது வில்வித்தையால் அவளது கரத்தை பற்றும் உயர்வைப் பெற்றான். இதனால் துரியோதனனுக்கு அர்ஜுனன் மீது பொறமை அதிகமாயிற்று.

    பீஷ்மர் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிளவைக் கண்டு மனம் வருந்தினார். இரு வர்க்கத்தையும் மிக அருகில் வைத்திருந்தால் மேலும் வம்பு வளரும் என்று பாண்டவர்களுக்கு இந்திரப்பிரஸ்தம் எனும் தனி ராஜாங்கத்த அமைத்துக் கொடுத்தார். துரியோதனனும் அவனது சகோதரர்களும் அஸ்தினாபுரத்தில் ஆட்சி செய்தனர். யுதிஷ்டிரன் என்ற தருமர் கிருஷ்ண பகவானின் ஆதரவுடன் ராஜஸ்ஸுய யாகத்தை வெகு விமரிசயாக நடத்தினான். இதனால் மேலும் பொறாமயால் வெகுண்ட துரியோதனன், மாமன் சகுனியின் போதனையால் தர்மரை பகடை ஆட்டத்திற்கு அழைத்தான். பகடையில் தனது அத்தனை ராஜ்யத்தையும் தர்மர் இழந்தார். தனது சொத்தை, ராஜ்யம், தம்பிமார்கள் மற்றும்தனது மனைவியையும் இழந்தார். பாண்டவர்கள பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாசம் செய்யக் கட்டளையிட்டான் துரியோதனன். பதிமூன்றாவது ஆண்டு அவர்கள் யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டும். யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் மீண்டும் ஒரு பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும். முடிவில் பாண்டவர்கள் வாழ ஒரு ஊசிமுனை இடம் கூட கொடுக்க மறுத்துவிட்டான் துரியோதனன். பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் தூது சென்றார் கிருஷ்ண பரமாத்மா. கிருஷ்ணரையும் இகழ்ந்து பேசினான் துரியோதனன். கண்ணனின் சமரசப் பேச்சுகளுக்கு இடம் கொடாத துரியோதனன், பாண்டவர்களைப் போருக்கு அழைத்தான்.

    பீஷ்மாச்சார்யாருக்கு பண்டவர்களும் பேரன்கள். கௌரவர்களும் பேரன்கள். கௌரவர்களின் கோபத்தையும், பொறாமையையும் குறைத்துப் போர் மூளாமல் இருப்பதற்குப் பல வகையிலும் முயன்றார். துரியோதனன் கட்டுப்படவில்லை. குருக்ஷத்திரத்தில் பாரதப் போர் மூண்டது. துரியோதனன் பீஷ்மரை தனது படைக்குத் தலைவனாக்கினான். போருக்கான சங்கை பீஷ்மர்தான் முதலில் ஊதினார் என்று கூறுகின்றது பாரதம். ஆகையால் போரைத் தொடங்கிய கௌரவர்கள்தான் என்பது நிலையான. பீஷ்மரின படை பதினோரு அக்ஷெணிகளைக் கொண்டதாகியது. ஒரு அக்ஷெணி என்பது 21870 யானைகளையும், 21870 ரதங்களையும், 65610 குதிரைகளையும், 109350 காலாட்படைகளையும் கொண்டதாகும். இப்படையானது பாண்டவர்களை படையுடன் மோதியது. யுதிஷ்டிரர் பீஷ்மரை ஆசிய முதலில் பெற்றுக் கொண்டு போரைத் வங்கினார். அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக கண்ணன் அமர்ந்தான். இரண்டு நாட்கள் போர் தொடர்ந்தது. மூன்றாம் நாள் அர்ஜுனன் அம்புகள் பீஷ்மரைத் தாக்கின. பீஷ்மர், பரசுராமர் அளித்த அஸ்திரத்தை கண்ணன் மீது எய்தார். கண்ணன் நெற்றியில் அம்பு பாய ரத்தம் ஆறாகப் பெருகியது. கோபமுற்ற கண்ணன் தனது சுதர்சன சக்கரத்தை கையில் ஏந்தி பீஷ்மரை நோக்கித் தாக்க வந்தான். பீஷ்மரோ சற்றும் கலங்காது சுதர்சன சக்கரத்தை ஏந்திய கண்ணனைக் கண்டு கண்ணா என்னை நீயே கொன்று விடு. நான் சொர்க்கம் செல்ல அதைவிட சிறந்த வழி உண்டா? என்றார். கண்ணனுக்கு கோபம் உண்டாக்கி அவன் சுதர்சன சக்கரைத் கையில் தாங்கியதால் பீஷ்மரின் சபதம் நிறவேறியது. ஒன்பது நாட்கள் போர் தொடர்ந்தது. பீஷ்மரின் வீரத்தால் பாண்டவர்கள சேனை மிகவும் சேதமடந்தது. யுதிஷ்டிரர் கண்ணனிடம் யோசனை கேட்க கண்ணனும் பீஷ்மரிடமே கேட்கலாம் என்று கூறினான். அன்றிரவு யுதிஷ்டிரரும், கண்ணனும் பீஷ்மரைச் சந்தித்தனர். இரு பக்கத்தினரும் உங்களுக்கு உறவினர்களாக இருந்தும் உங்கள் அன்பு ஏன் கௌரவர்களிடம் அதிகமாக இருக்கின்றது என்று கண்ணன் பீஷ்மரைக் கேட்டான். கண்ணா என் உடல்தான் கௌரவர்களுக்குச் சொந்தம். காரணம் நான் அவர்களை அரண்மனையில் வாழ்ந்துதேன். அவர்களை உப்பைத் தின்று வளர்ந்தது இந்த உடல். ஆனால் என் உள்ளம் என்பது பாண்டவர்களுக்குத்தான் சொந்தம். அர்ஜுனா, என்றைக்கு கௌரவர்கள் கண்ணனின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவில்லையோ அன்றே அவர்களை தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. உனது வெற்றியும் உறுதியான. சிகண்டியை என் முன் நிறுத்து, நான் எனது வில்லையும், அம்புகளையும் எறிந்து விடுகிறேன். நான் மேற்கொண்டு போர் புரிய மாட்டேன் என்றார். சிகண்டி தான் மணக்க மறுத்த அம்பா என்பது பீஷ்மருக்குத் தெரியும். சிகண்டி பெண் என்பதால் அவளுடன் போர் புரிய அவர் சம்மதிக்கவில்லை. பத்தாம் நாள் போரின் போது அர்ஜுனன் சிகண்டியை பீஷ்மர் முன் நிறுத்தினான். பீஷ்மர் தனது போர்க்கருவிகளை கீழே எறிந்தார். அர்ஜுனன் அவர் மீது அம்புகளை சரமாரியாக எய்தான். பீஷ்மர் அவற்றின் தாக்குதலால் தரையில் சாய்ந்தார். ஆனாலும் அவரது உடல் தரையைத் தொடவில்லை. அர்ஜுன அம்புகள் அவருக்குப் படுக்கையாக அமைந்தன. தாகம் என்று அவர் கூற, அர்ஜுனன் ஓர் அம்பை எய்து பூமியினின்று நீர் ஊற்றை வரவழைத்தான். அவற்றின் நீரே பீஷ்மரின் வாய்க்குள் பாய்ந்து அவரை தாகத்தைப் போக்கியது. அவ்வூற்றுதான் அன்னை கங்கை. தாகம் தணிக்கப் பெற்றுத் தன் தாயின் மடியில் தலை வைத்து மரணத்திற்குக் காத்திருந்தார் பீஷ்மர். இவ்விடைக்காலத்தில் விஷ்ணு சஉறஸ்ரநாமத்தை நமக்கு ஈன்றார்.

    பாரதப் போர் துரியோதனனின் வீழ்ச்சியுடன் முடிவுற்றது. யுதிஷ்டிரருக்கு முடி சூட்டப் பெற்றது. பஞ்ச பாண்டவர்களும் பீஷ்மரின் திருவடிகளை வணங்கினர். யுதிஷ்டிரா தர்மத்தைக் காப்பாற்று. கொடியர்களை தண்டிக்கத் தவறாதே. கர்வத்தை அழித்துவிடு. மக்களின் மேன்மை கருதி ராஜ்யத்தை ஆள் என்று கூறி அவர்களை வாழ்த்தினார். கண்ணன் இருக்குமிடத்தில் தர்மம் இருக்கும். தர்மம் நிலைக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம். கண்ணா சோர்ந்து விட்டேன். ஈரேழ் உலகிற்கும் நீதான் அதிபதி. தர்மத்தை நிலை கொள்ளச் செய்து விட்டாய். நான் விடைபெறும் தருணம் வந்துவிட்டது. எனது உயிருக்கு விடை கிடைக்க வேண்டும் என்று கூறினார். அவரது தந்தை அவருக்குக் கொடுத்த வரம் அவர் விரும்பும் நேரத்தில் மட்டுமே மரணம் அவரைத் தழுவும் என்பதாகும். பீஷ்மர் உதராயண புண்ய காலத்திற்குக் காத்திருந்தார். அவ்வேளயில்தான் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும்,மஹா விஷ்ணுவின் திருவடிகளுக்கு ஆத்மா விரந்து செல்லும் என்பதும் நம்பிக்கை. ரத சப்தமி அன்றுதான் சூரிய நாராயணனின் ரதமான தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்பி தொடர்ந்து செல்கின்றது. இதுவே உத்ராயண புண்ணிய காலமாகும். ரத சப்தமியின் மறுநாளான பீஷ்மாஷ்டமி அன்று பீஷ்மரின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரிந்தது. பீஷ்மாஷ்டமி அன்றுதான் அவருக்கு யாவரும் அர்க்யம் கொடுக்கும் நாள். தகப்பனார் இல்லாதவர்கள்தான் தங்களது தகப்பனாருக்குத் திதியும், தர்ப்பணமும் கொடுக்க இயலும். ஆனால் பீஷ்மருக்கோ தகப்பனார் உள்ளவர்களும், தகப்பனார் இல்லாதவர்களும் அர்க்யம் கொடுக்கலாம். இவ்விவரம் பற்றிய ஸ்லோகம் நான்கு அடிகளைக் கொண்டது. அம்மந்திரத்தின் பொருள் பின்வருமாறு:-

    1. வியாக்ர கோத்திரத்தில் பிறந்தவரும், பிறவி முதல் பிரம்மச்சர்யததை கடைப்பிடிப்பவரும், கங்கையின் மைந்தனுமான பீஷ்மருக்கு அர்க்யம் அளிக்கின்றேன். (மனிதர்களுக்கு நீர் ஊற்றி கொடுக்கப் பெறுவது தர்ப்பணம்.
    தெய்வத்திற்கு கொடுக்கப் பெறுவது அர்க்யம்.

    2. தனக்கென்று பிள்ளைகள் இல்லாதவரும் சந்தனு மஹாராஜாவின் புத்திரன் ஆனவரும், இந்திரியங்களை ஜெயித்தவரும், ஸத்யத்தை கடைப்பிடித்து நடப்பவருமான பீஷ்மருக்கு நான் அர்க்யம் அளிக்கின்றேன்.

    3. அஷ்ட வசுக்களில் ஒருவரும், பால்யம் முதல் பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிப்பவருமான பீஷ்மருக்கு நான் அர்க்யம் அளிக்கின்றேன்.

    4, இவ்வுலகில் பிள்ளகளும், பேரன்களும் உள்ளவர்கள் அவர்கள் அளிக்கும் நீரினால் எவ்வளவு திருப்தி அடைவார்களோ அதே போல் திருப்தி பீஷ்மருக்கு என்னால் அளிக்கப்படும் நீரினால் உண்டாகட்டும்.

    பீஷ்மாச்சாரியாரின் இறுதியால் நாம் அறியும் செய்திகள் அவரது உயர்வினைப் பறைசாற்றுகின்றன. அவர் விரும்பிய வண்ணமே அம்புப் படுக்கையில் படுத்தவாறு தனது தாயான கங்கையின் மடியில் தலை வைத்தவாறு உத்ராயண புண்ணிய காலத்தில் அவரது உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. உலகில் குடும்பம் என்று உள்ளவர்களுக்கு அவர்களை குடும்பத்தார் மட்டுமே அர்ப்பணம் செய்கின்றனர். ஆனால் பீஷ்மாச்சாரியாருக்கு இவ்வுலகமே அர்ப்பணம் செய்யலாம். மனிதர்களுக்குத் தர்ப்பணம் செய்யப்படும்போது தெய்வங்களுக்கு இணையாகக் கருதப்படும் பீஷ்மருக்குஅர்க்யம் செய்யப்படுகின்றது. அவரது சத்ய நெறியும், தூய்மயான பிரம்மச்சரியமும் அவரை என்றுமே புகழ்மிக்கவராகத் திகழச் செய்யும். காரணம் அவர் கங்கையின் மைந்தன். உலகத்தவர் அனைவரின் பாவத்தையும் வாங்கிக் கொள்ளும் கங்கையின் தூய்மை சூரியர், சந்திரர் உள்ளவரை நிலைத்து நிற்கும். அவளை தூய்மைக்கு என்றும் அழிவு கிடையாது. காரணம் அவள் வற்றாத ஜீவ நதி.

     
         
    Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com