• கால் போன போக்கிலே

  மனித உருவில் இடுப்புக்குக் கீழ் தொடைப் பகுதியிலிருந் பாதம் வரை அமந்திருப்பதுதான் கால் எனப்படும் பகுதி ஆகும். தொடைப் பகுதி, முழங்கால், கணுக்கால், பாதம், கால் விரல்கள் என்று பல பகுதிகள் கொண்ட கால்தான் நிற்கும் பணி, நடக்கும் பணி, ஓடும் பணி, அமரும் பணி என்று பல தொழில்களைச் செய்கின்றது.

  உயிரினம் அனைத்திலும் பிறந்தவுடன் வெகு சிறிது நேரத்தில் குட்டியானது உடனே நான்கு கால்களில் எழுந்து நின்று நகரத் தொடங்கி விடுகின்றன. ஆனால் மனித இனத்தில் மட்டும் குழந்தை பிறந்தவுடன் எழுந்து நிற்க இயல்வதில்லை. படுத்த நிலைதான். சில மாதங்களுக்குப் பின்புதான் குப்புறப்படுக்க இயலும் நிலை. அதன் பின்பு தவழும் நிலை, ஓர் ஆண்டுக்குப் பின்தான் நடக்க இயலும் நிலை. மனித உடம்பு ஒவ்வொருவரின் பாத அளவில் 6 அடி உயரம்தான் இருக்க இயலும். அதிலும் ஒரு அடி தான் நீண்ட வாக்கில் (Horizontal) உள்ள மற்ற ஐந்து அடியும் உயர வாட்டத்தில் (vertical) அமந்துள்ளது. ஒரு அடி பாதம்தான் உடம்பின் அத்தனைக் கனத்தையும் தாங்குகின்றது.

  கால் என்ற உடனேயே “காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமான தில்லை நடராஜர்தான் நினைவிற்கு முதலில் வருவார். “இடது பாதம் தூக்கி ஆடும் நடராஜனடி பணிவையே, “ஆடிய பாதம்" என்று நடராஜரைப் பலவாறு திருவடிகளைப் போற்றிப் பாடுவர் பல பக்தர்கள். நடராஜரின் தூக்கிய திருவடியில் அணியப் பெறும் குஞ்சிதபாதம் வெட்டிவேரால் செய்யப்பட்டிருக்கும். மலராலும் தொடுக்கப்பட்டிருக்கும். சிறிய மாலை போன்ற இக்காலணியே பிரசாதமாக வழங்கப் பெறுகின்றது. குஞ்சிதபாதம் அணிந்திருக்கும் அதே கணுக்காலில்தான் அம்பிகை கொலுசு அணிந்திருக்கின்றாள். திருக்கடவூர்த் தலம் அட்ட வீரட்டங்களுள் ஒன்று. சிவன் வீரச் செயல் புரிந்த தலங்கள் எட்டு. மார்க்கண்டேயரைப் பிணத்துச் செல்ல காலன் கயிற்றை வீசியபோது பால முனிவன் அமுதகடேஸ்வர மூர்த்தியக் கட்டிக் கொண்டார். காலன் வீசிய கயிறு மார்க்கண்டேயருடன் சிவலிங்கத்தையும் பிணத்தது. வெகுண்டெழுந்த சிவன் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி தந்து இட காலால் காலன உதைத்து சம்ஹாரம் செய்து பாலமுனிவனைக் காத்தார். காலனை உதைத்த கால் அம்பிகை பாகமான இடப்பாகத்துக் கால்!!

  பாதம் என்றவுடன் ராமர் பாதம் தான் மனதில் தோன்றும். ராமேஸ்வரம் தலத்தில் ராமரது பாதம் பதிந்த இடம் குன்றின் மீது அமையப் பெற்று போற்றி வணங்கப் பெறுகின்றது. கிருஷ்ண ஜெயந்தி அன்று சின்னக் குழந்தைப் பாதம் வீட்டிற்குள் நடந்து வருவது போல வரையப் பெறும். கண்ணன் நம் வீட்டிற்குப் பிரவேசம் செய்வதாக அதன் ஐதீகம்.

  பெண்கள் காலில் அணிவது கொலுசு, காற்சிலம்பு, மற்றும் கால் மோதிரமான மிஞ்சி. கண்ணகியின் காற் சிலம்பு கூறும் கதைதான் சிலப்பதிகாரம். மன்னனின் மனவி அணிந்திருந்த சிலம்பில் முத்துப் பரல்கள் இருக்கக் கண்ணகியின் சிலம்பில் மாணிக்கங்கள் இருந்தன. இதன் வாயிலாக அக்காலத்து வணிகர்கள் மன்னர்களையும் விட செல்வந்தர்களாக இருந்தனர் என்று
  தெரிந்து கொள்ள இயல்கின்றது.

  கொலுசு என்றவுடன் நினைவில் தோன்றுவது மூகாம்பிகையின் வரலாறு. ஆதிசங்கரர் அம்பிகையை ஆழ்ந்து பூஜித்தார். அவரது பக்திக்கு இரங்கிக் காட்சி தந்த அன்னை, ‘என்ன வரம் வேண்டும்? என்று கேட்க, அவரும் ‘நீ என்னுடன் சோட்டாணிக்கரைக்கு வந்துவிடவேண்டும் என்றார். அன்னை சிரித்துக் கொண்டு “சரி, நீ நட, நான் பின்னால் வருகிறேன், நீ திரும்பிப் பார்க்க்வே கூடாது. அப்படிப் பார்த்தால் நான் அப்போது இருக்கும் இடத்திலேயே பிரதிஷ்டயாகி விடுவேன் என்று கூறி நடக்கத் துவங்கினாள். அவள கொலுசுச் சத்தம் காதில் ‘கிண்கிணி கிண்கிணி என்று கேட்க ஆதிசங்கரரும் முன்னால் நடக்கலானார். சௌபர்ணிகா ஆற்றைக் கடக்கும் தருணத்தில் அந்தக் கொலுசுச் சத்தம் கேட்கவில்ல. ஆதிசங்கரர் திரும்பிப் பார்க்க அன்னையும் கொல்லூரிலேயே மூகாம்பிகையாகப் பிரதிஷ்டை ஆனதாக ஐதீகம்.

  பெண்கள் கால் விரல்களில் அணியும் மிஞ்சி திருமணத்தில் கணவரால் அணிவிக்கப் பெறுகின்றது. அம்மி மீது மணமகன் மணப்பெண்ணின் கால் விரலைப் பிடித்து, காலைப் பதித்து அவளது கால்விரல்களில் மிஞ்சியை அணிவிக்கின்றான். மிஞ்சி என்பது பெண்ணிற்குக் காலைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சிறிய ஆபரணமாகும். நகரத்தார் சமூகத்தில் மணமகனின் தாயாரோ, தமக்கை, தங்கைகளோதான் மிஞ்சி அணிவிக்கும் சடங்கு உண்டு.

  ராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்திக் கொண்டு போகும்போது அவளது ஆபரணங்கள அவள் கழற்றி வீசுகின்றாள். அவற்றக் கண்டெடுத்த இராமன் இலக்குவனிடம் காட்டி “இவை சீதையுடய ஆபரணங்களா பார் என்று கூற இலக்குமணன் “எனக்கு அண்ணியின் கொலுசுகளும் மிஞ்சிகளும்தான் தெரிகின்றன. மற்ற ஆபரணங்களத் தெரியவில்லை என்கின்றான். காரணம் அவன் சீதையின் பாதங்களை மட்டுமே கண்டிருக்கின்றான்.

  “தத்தக்கா பித்தக்கா நாலு காலு, தானே நடக்கயிலே ரெண்டு காலு, கூனி நடக்கயிலே மூணு காலு, ஆடி ஒடுங்கியவுடன் பத்துக்காலு என்று பாட்டுண்டு. குழந்தைப் பருவத்தில் தவழும் போது இரண்டு கால்களுடன் கைகளும் சேர்த்து உதவுகின்றன. தானே நடக்கையில் இரண்டு கால்களுக்கும் வேலை. வயதாகிக் கூன் விழுந்தவுடன் இரண்டு கால்களோடு கைத்தடியும் சேர்ந்து மூன்று கால்களாகின்றது. உயிர் ஆடி ஒடுங்கியவுடன் தூக்கிச் செல்லும் நாலு பேர்களது கால்களுடன் 8+2 பத்துக் கால் ஆகின்றது.

  இந்தக் காலத்தில் யாரப் பார்த்தாலும் முழங்கால் வலி, மற்றவர்களைப் பற்றி என்ன, என்னுடைய முழங்கால்களே ரொம்ப பலஹீனம், ஓயாது கால் பயிற்சி செய்தால்தான் உண்டு. மருத்துவர்கள் சர்வ சாதாரணமாக முழங்கால் மாற்று அறுவச் சிகிச்ச செய்கிறார்களே!!. ஏதோ இறைவன் அருளால் என் சொந்த முழங்காலில் நின்றால் தேவலை என்று தோன்றுகிறது. கால்களைப் பாதிக்கக்கூடிய நோய் போலியோ ஆர்தரடிஸ் முழங்கால்களையும் பித்த வெடிவு மற்றும் "கார்ன்" எனப்படும் தோல் காய்ப்பு பாதங்களையும் அவதிப்படுத்தக்கூடிய நோய்கள்.

  கால்களப் பற்றி சாதாரணப் பேச்சு வழக்கில் கூறும் கூற்றுக்கள். ‘நான் முன் வத்த காலப் பின் வக்க மாட்டேன் ("பாபா" படத்தில் ரஜினிகாந்த் பாட்டு வரிகளில் வரும்) என்றால் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளமாட்டேன் என்று பொருள். “உங்கள் பாதம் எங்கள் வீட்டில் படவேண்டும்" என்றோ “உங்கள் பாதம் பட்ட இடமெல்லாம் பூ பூக்கும்" என்றோ கூறினால் அவர்களது வருகையால் நன்மை உண்டாகும் என்று பொருள். “கால் போன போக்கிலே மனம் போகலாமா" என்றால் மனதில் முதலில் உறுதி செய்த பின்பே எந்தக் காரியத்தையும் செயலாற்ற வேண்டும் என்று பொருள்.

  “கால் கட்டு போடுவது" என்றால் திருமணம் செய்வது அல்ல கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்று பொருள். “ஒத்தக் காலில்" நிற்கிறான் என்றால் விடாப்பிடியாக இருக்கிறான் என்று பொருள்.

  பிரம்மாண்ட அட்டைப் பூச்சிக்கு ஆயிரம் கால்கள் (Millipede) சிறிய அட்டப்பூச்சிக்கு நூறு கால்கள் (Centipede). எட்டுக்கால் பூச்சிக்கு எட்டுக் கால், நாற்காலிக்கு நாலு கால், முக்காலிக்கு மூன்று கால், நமக்கெல்லாம் இரண்டு கால். கொக்குவிற்கு ஒற்றைக்கால் - என்ன என்ன என்ன என்கிறீர்களா- சும்மா ஒரு ஜோக்கிற்குத்தான். N.S.கிருஷ்ணன், T.A.மதுரம் நடித்த ஒரு பழைய படம். அதில் T.A.மதுரம் ஒரு பர்மா நாட்டுப் பெண்மணி, N.S.கிருஷ்ணன் அவரது சமையல்காரர், கொக்கு கறி சமைக்கச் சொல்கிறார் மதுரம். சமைக்கும்பொழுதே அதில் ஒரு காலைத் தின்று விடுகிறார் கிருஷ்ணன். கறியை மதுரம் சாப்பிடப் பரிமாறுகிறார் கிருஷ்ணன். “எங்கே ஒரு கால்தான் இருக்கிறது. மற்றொரு கால் எங்கே? என்று மதுரம் மிரட்ட கிருஷ்ணன் ஜன்னல் பக்கம் பார்க்கிறார். அங்கு கொக்கு ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு ஒற்றைக் காலில் நிற்கிறது. அதைக் காட்டி “அங்கே பாருங்கள் கொக்கிற்கு ஒரே கால்தான்" என்று அவர் சொல்ல மதுரமும் பார்த்துவிடடு “ஆமா கொக்கிற்கு ஒரு கால்தான்" என்று ஒத்துக் கொள்கிறார்.

  மாபலி சக்ரவர்த்தியிடம் மூணடி மண் கேட்டு வந்த பெருமாள் விஸ்வரூபம் எடுத்துப் பூவுலகை ஒரு அடியிலும் விண்ணுலகை ஒரு அடியிலும் அளந்த பின்பு மூன்றாவது அடியை வைக்கத் தன சிரசைக் காட்டுகிறான் மாபலி,, அவன் சிரத்தின் மீது தன அடியைப் பதித்து அவனை ஆட்கொண்டு சிரஞ்சீவி ஆக்கினார் விஷ்ணு. மஹாவிஷ்ணுவின் புனிதத் திருவடிகளப் போற்றி உங்கள் அனைவருககும் என்றும் எப்பொழும் நல்லவையே நடக்க வேண்டும் என்று கூறி விடைபெறுகின்றேன்.

  உங்கள் அனவருக்கும் என் நவராத்திரி வாழ்த்துக்கள். மற்றும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com