• மஹாஸ்வாமி: ஓர் தீர்க்க தரிசி

  எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள “ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய அற்புத அனுபவங்கள்” என்னும் நூலுக்கு அறிமுக உரை எழுதும்படி அபிராமி இதழ் ஆசிரியர் கேட்டுக் கொண்டார்கள். அதற்கேற்ப என்னுடய அறிமுக உரையின எழுதி அனுப்பியுள்ளேன். அதனைப் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.

  பல வருடங்களுக்கு முன்பு தினமணி நாளிதழில், நானும் எனது கணவரும் மஉறா சுவாமிகளிடம் தரிசன அனுபவம் பெற்ற நிகழ்ச்சியினைப் பற்றி எழுதியிருந்தேன். அந்த அனுபவத்தினை மறுபடியும், அபிராமி இதழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

  மஉறாசுவாமிகள் என்று அனைவராலும் அழைக்கப் பெறும் பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் முக்தி அடைந்த விட்டார்கள் என்று யார் சொன்னது? அந்த நடமாடும் தெய்வம் இன்றும் நம் ஊன் ஆகி உயிர் ஆகி, உயிரில் ஊறும் உணர்வாகி, ஐம்பூதங்களுமாகி நம்மிடையே நடமாடிக் கொண்டே விளங்குகின்றார்.

  1993ம் ஆண்டு தை மாதம் எங்கள் மகள் அஸ்வினுக்கும் என் தம்பியின் மகளான வள்ளியம்மக்கும் திருமணம் செய்விப்பதாக எங்கள் இரு குடும்பமும் முடிவு செய்தன. திருமணம் 1994 தை மாதம் நடபெறுவதற்கு நாள் குறித்தோம்.

  எங்கள் குடும்பத்தில் தை மாதம்தான் ஆண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்யும் வழக்கம். தோதான தேதி கிடக்காமல் போய்விடுமோ என்று எண்ணி ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு முன்பே தேதி பார்த்து விட்டோம். எனக்கும் என் கணவருக்கும் உள்ளுக்குள் ஒரு பயம். கூடிய சீக்கிரம் பெரியவர்களிடம் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி, விரவில் காஞ்சிபுரம் சென்றோம். முதலில் மஉறாசுவாமியைத் தரிசனம் செய்யச் சென்றோம். அவர்கள் படுத்து இருந்ததால் நாங்கள் நமஸ்காரம செய்யக்கூடாது என்பதால் செய்ய இயலவில்லை. அவர்களைச் சுற்றி மடத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இருந்தனர். நாங்கள் நின்றபடி வணங்கினோம். அமரச் சொல்லி சைகை காட்டினார்கள். அப்பொழு என் கணவர் திரு.ஏ.சி.முத்தையா அவர்கள் சுவாமிகளிடம் “எங்கள் மகனுக்குக் கல்யாணம் நிச்சயம் செய் விட்டோம்” என்று சொன்னவுடன் மடத்தின் சேவார்த்திகளிடம் கைகளைக் காட்டிச் சைகை செய்தார் சுவாமிகள். உடனே எனக்குப் பூரண தேங்காய் கொண்டு வரச் சொல்கிறார்கள் என்று புரிந்து விட்டது. நான் உடனே, “கல்யாணம் அடுத்த ஆண்டு தை மாதம்தான். நாங்கள் இன்னும் பத்திரிக்கை எதுவும் கொண்டு வரவில்லையே என்றேன். சிரித்துக் கொண்டார்கள். அதற்குள் பூரணத் தேங்காய் வந்து விட்டது. அதன் மீது அருகில் இருந்த மல்லிகைச் சரத்தை வத்து, எங்கள் இருவரையும் அழைத்துக் கை மீது கை வைக்கச் சொல்லிக் கொடுத்து விட்டார்கள். வாங்கிக் கொண்ட பின்பும் அவர்கள் பார்வ படும் வண்ணம் எங்கள மீண்டும் அமரச் சொன்னார்கள். ஒரு இருபது நிமிடம் இருக்கும். அமர்ந்திருந்தோம். பின்பு அங்கு இருக்கும் சேவார்த்தி ஒருவர், “செட்டியாரும், ஆச்சியும் சென்னை திரும்ப வேண்டும். பெரியவர் உத்தரவு கொடுத்தால்தானே போகலாம் என்றார். சுவாமிகளும் கையை உயர்த்தி, ஆசீர்வதித்து உத்தரவு கொடுத்தார்கள். நாங்கள் இருவரும் இனம் புரியாததொரு நிலையில் ஜெயேந்திரப பெரியவரைப் பார்க்கச் சென்றோம். அவர்கள் எங்கள் கையில் உள்ள தேங்காயைப் பார்த்துவிட்டுச் சிரித்துக் கொண்டே, “என்ன, அடுத்த ஆண்டு கல்யாணத்திற்கு இந்த ஆண்டே தேங்காய் வாங்கி விட்டீர்களா? என்றார்கள். “சுவாமி, எங்களுக்கு எவும் புரியவில்லை. கல்யாணம் என்று சொன்னவுடன் மஉறாசுவாமிகள் பூரணத் தேங்காய் கொடுத்து விட்டார்கள். நாங்கள் அம்பாளைத் தரிசனம் செய்துவிட்டு ஊருக்குப் போகிறோம் என்றோம்.

  அவர்கள் உடனே, “இன்று கோயில் நடை சாத்தி விட்டார்கள். நீங்கள் மடத்திலேயே பூஜையைப் பார்த்து விட்டு, தீபாராதனையையும் பார்த்துவிட்டு பாலப் பெரியவர்களிடமும் விஷயத்தைச் சொல்லி விட்டு, ஊருக்குப் புறப்படுங்கள் என்று கூறி, எப்போதும் போல் வேகமாக நடந்து போய் விட்டார்கள். பிறகு விசாரித்ததில் கோவில் வீதியில் யாரோ இறந்து விட்டதால் நடை சாத்தி விட்டார்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் சொன்னது போல் பூஜையைப் பார்க்கச் சென்றோம். அங்கு போனால் பாலப் பெரியவர்கள் யாரோ செய்து கொடுத்திருந்த பிரபையின் நடுவில் அமர்ந்து தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அம்பாள் தரிசனம் கோவிலில் இல்லையென்பதால் இப்படி ஒரு தரிசனம் போலும் என்று நினைத்துக் கொண்டு தீர்த்தம் வாங்கிக் கொண்டு பாலப் பெரியவரிடம் விவரத்தைச் சொன்னோம். அவரகள் ஆசி வழங்கி “சென்று வாருங்கள் என்றார்கள். குழம்பிய நிலையில் தேங்காயத் தூக்கிக் கொண்டே நேராக ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரிக்குச் சென்றோம். அன்று ஞாயிற்றுக்கிழைமை என்பதால் கல்லூரி விடுமுறை. இருப்பினும் அங்குள்ள விநாயகர் கோயில் திறந்ததிருந்தது. அர்ச்சகர் தேங்காயை வத்து அர்ச்சனை செய்து விட்டு பிரசாதத்துடன் அதனை எங்களுக்குத் தந்தார். சென்னக்குத் திரும்பினோம். பூரணத் தேங்காயைக் கொண்டு வந்து பூஜை அறையில் பெரியவர்களின் படத்தின் அருகிலேயே வத்து விட்டேன். புரட்டாசி மாதம் நவராத்திரி முடிந்தது. சரியாக 9 மாதங்கள் கழித்துப் பூஜை அறையில் மஉறா சுவாமி கொடுத்த தேங்காய எடுத்து ஆட்டிப் பார்த்தேன். தண்ணீர் ஆடியது. எனக்கு ஆச்சரியம். எங்கள் இல்லத்தில் பணி புரியும் இராமலிங்கத்திடம் காட்டினேன். “சாதாரணமாகப் பூரணத் தேங்காயைப் பூஜை அறையில்தான் வத்துக் கொள்வார்கள். ஆனால் 9 மாதம் ஆகியும் தண்ணீர் ஆடுகிறதே. வேண்டுமானால் நட்டுப் பாருங்கள் என்றார். அதைத் தோட்ட ஆளிடம் கொடுத்த்து தொட்டியில் நட்டு வக்கைச் சொன்னேன்.

  ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் சென்றன. மார்கழிக் கடைசி. நாங்கள் அஸ்வினின் கல்யாணத்திற்கான சுமங்கலி பூஜைக்காக கானாடுகாத்தான் சென்றிருந்தோம். நாங்கள் படைப்பு என்று சொல்வோம். அன்று எங்கள் குல தெய்வம் பூரண புஷ்கலா சமேதரான அய்யனார் கோவிலில் அபிஷேகம். மாலை வீட்டில் நாச்சாத்தாள் எனும் சுமங்கலியின் பிரார்த்தனை. அபிஷேகம் நடக்கும் பொழுதே என்னைப் போட்டு ஒரு “பிரட்டு பிரட்டியது. சொல்ல முடியாமல் திணறியிருக்கின்றேன். என் கணவரின் காலக் கெட்டியாகப் பிடித்க் கொண்டு அழுதிருக்கின்றேன். என் மீது ஸ்வாமி வந்து விட்டது என்று குடம் தண்ணீர் கொட்டியிருக்கின்றார்கள். எனக்கு ஸ்மரனயே இல்லை. எப்படியோ வீட்டிற்கு அழைத்து வந்து படுக்க வத்திருக்கின்றார்கள். எனக்கு மயக்கம் தளிந்தவுடன் பார்த்தேன். சற்று தூரத்தில் என் மாமனார் நின்று கொண்டிருந்தார். அருகில் என் பெரியம்மாவின் பெண் சிகப்பி ஆச்சி (எம்.ஏ.எம்.ராமசுவாமியின் மனவி) உட்கார்ந்திருந்தார்கள். “அக்கா, யாராவது பெண் குழந்தை வந்ததா? கால் சலங்கை ஓசை கேட்டதே? என்றேன். “பெண் குழந்தை யாரும் வரவில்லையே. உனக்கு என்ன ஆச்சு? எங்களை எல்லாம் பயமுறுத்தி விட்டாயே? என்று சொல்லும் போதே அவர்கள் கண்கள் குளமாயின. இதைப் பார்த்த என் மாமனார் திரு.எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் அவர்கள் நான் ஏதோ குழந்தைகளுக்குச் சாப்பாடு போட வேண்டும் என்று நினக்கிறேனோ? என்று ஊரில் இருந்த அத்தனை சின்னக் குழந்தைகளையும் கூட்டி வந்து உட்கார வைத்துச் சாப்பாடு பரிமாறச் சொல்லி, என்னை “வா..வந்து பார். உனக்குச் சந்தோஷமா? என்று கேட்டுச் சிரித்தார்.

  அன்று வெள்ளிக்கிழமை. அனுஷ நட்சத்திரம். ஜனவரி 8ம் தேதி. சுமார் 3.30 மணிக்குப் படுத்திருந்த நான் எழுந்தேன். எங்கள் மகன் அஸ்வின் மேலேயிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார். படியில் நின்றவாறு என்னைப் பார்த்து, “மஉறாசுவாமி அவர்கள் முக்தி அடந்து விட்டார்களாம் என்று கூறினார். அந்த மாபெரும் ஜோதி ஐம்பூதங்களுள் கலந்த விட்டிருக்கின்றது. அதுதான் என்னை இத்தனை கிலோமீட்டர் தொலைவில் போட்டு ஆட்டியிருக்கின்றது. பிரார்த்தனகள் எல்லாம் முடிந்து நாங்கள் சென்ன வந்து விட்டோம்.

  1994 ஜனவரி 23 திருமணம். திருமணத்திற்கு இன்னும்15 நாட்கள்தான் இருந்தன. அப்பொழுதான் இந்த எளிய மனத்க்கு எட்டியது. “உன் மகன் திருமணத்திற்குப் பத்திரிக்க கொண்டு வரும் பொழுது உனக்குப் பூரணத் தேங்காய் கொடுக்க இந்தப் பூத உடல் இருக்காது அதனாலேயே ஒரு ஆண்டுக்கு முன்பே கொடுத்து விட்டேன் என்று மஉறா சுவாமிகள் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்கள்!

  கல்யாணப் பத்திரிக்கையுடன் காஞ்சிபுரம் சென்றோம். ஜெயேந்திரப் பெரியவரிடம் என் கணவர் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினார். பெரியவர் அவர்களும் காமாட்சி அம்மன் படம் போட்ட சௌந்தர்யலஉறரி புஸ்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்தார்கள். “அன்று உனக்கு அம்பாள் ஏன் தரிசனம் கொடுக்கவில்லை என்று புரிகிறதா? என்று சொல்லாமல் சொன்னது போல் புரிந்தது.

  திருமணம் ஜனவரி 23ஆம் தேதி விமரிசையாக நடந்தது. காஞ்சி மடத்தில் இருந்தும், காமாட்சி கோயிலில் இருந்தும் பிரசாதம் வந்தது. தை முடிந்து மாசி மாதம், நான் பெரியவர்களின் பெயரில் ஆரம்பிக்கப் பெறும் லைப்ரரிக்காக இரண்டு மர ஸ்டாண்டுகள் செய்யச் சொல்லியிருந்தேன். அதற்கான பணைத்தக் கொடுப்பதற்காக வெங்கடேஸ்வரா கல்லூரி முதல்வர் புரொபசர் கிருஷ்ணன் அவர்களை வரச் சொல்லியிருந்தேன். அவர் வருகைக்காகக் காத்திருந்தவளை என் தோட்ட ஆள் கூப்பிட்டார். “ஆச்சி, நீங்கள் கொடுத்த தேங்காய் முளைத்து விட்டது என்று சந்தோஷமாகக் கூறினான். ஓடிப்போய்ப் பார்த்தேன். தேங்காய் முளைத்திருந்தது. மஉறாசுவாமியின் சிரிப்பைப் போல் வெள்ளை வெளேரென்று இருந்தது. என்னுள் மின்சாரம் பாய்வதைப் போல் ஓர் உணர்ச்சி. பார்த்தால் அன்று உத்திராட நட்சத்திரம். பாலப் பெரியவரின் ஜெயந்தி. அவ்விருக்ஷத்திற்கு “சந்திரா" என்று பெயர் சூட்டினேன். சந்திரா நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள். அதே ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி காமாட்சி கோவிலில் சொர்ண விமான திருப்பணி ஆரம்பத்திற்காக காஞ்சிபுரம் சென்றிருந்தோம். அது முடிந்த பின்பு பாலப் பெரியவரிடம் வேண்டிக் கொண்டேன். 6-ஆம் தேதி அவர்களே வந்து அந்த விருக்ஷத்த அவர்கள பார்வையில் நடச் சொன்னார்கள். முதலில் நீர் ஊற்றினார்கள். என் பக்திக்கு சாட்சியாக “சந்திரா" இன்றும் என் வீட்டுத் தோட்டத்தில் அருட்பொலிவோடு நிற்கின்றாள். வெகு விரவில் ‘கனி தருவாள். ‘முதற்கனி மஉறாசுவாமியின் அதிஷ்டானத்திற்கு அபிஷேகத்திற்கும், காமாட்சி அம்பாளின் அபிஷேகத்திற்கும்தான்.

  இந்த நிகழ்வு சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இன்று சந்திரா பூரண வளர்ச்சியுடன் கூடிய விருக்ஷமாக நிற்கின்றாள். பல கனிகளை ஈன்று விட்டாள். இன்னும் பல கனிகள் தருவாள். பலர் என்னிடம் கேட்டிருக்கின்றார்கள் பெரியவர் உங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றார்களா? என்று. அவர்களுக்கு எனது பதில் இதோ!! “எல்லா இடங்களுக்கும் வந்து போவது போல் என் வீட்டிற்கு வரவில்லை. வந்து எங்களுடனேயே நிரந்தரமாக விருக்ஷமாகத் தங்கி இருக்கின்றார்கள்!!

   
       
  Copyright © 2016 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com