
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் (பகுதி - 1)
உருவமும் வடிவமும் இல்லாத தெய்வீகச் சக்திக்குப் பல வடிவங்கள் கொடுத்து மனிதன் பூஜிக்கின்றான். இவ்வகையில் அந்தச் சக்திக்கு அவன் பெண் உருவம் கொடுத்துத் தாயாகப் பூஜிக்கும் முறையே சாக்தமாகும். சாக்தம் என்பது சக்தி வழிபாடு. சக்தி வழிபாட்டில் முதன்மையான துதியாகப் போற்றப் பெறுவது ‘லலிதா ஸஉறஸ்ரநாமம்’. இது தேவியின் ஆயிரம் நாமங்களை அழகாக ஆழமாகக் குறிப்பிடும் அரிய நூல். அன்னையின் முந்நூறு நாமங்களைக் குறிப்பிடும் துதி நூல் ‘லலிதா த்ரிசதி’ ஆகும். இது தவிர அன்னையின் பெருமை கூறும் ‘தேவி கட்க மாலா’, ‘ஷ்யாமளா தண்டகம’, ‘மூக பஞ்ச சதி’ என்று பல நூல்கள் சமஸ்க்ருதத்தில் உள்ளபோதும் தமிழல் “அபிராமி அந்தாதி”, ‘சகலகலாவல்லிமாலை’, ‘தேவி நவரத்னமாலை’ என்றும் பல அற்புதத் துதிப் பாடல்கள் உள.
தேவித் துதிப் பாடல்களில் ‘அயிகிரி நந்தினி’ எனும் பாடல் பக்தர்களிடையே மிகவும் பிரபலமானது. இதேபோல் ராஜராஜேஸ்வரி அஷ்டகமும் மிகவும் விரும்பப்படும் துதிப் பாடல். இதற்கு ‘அம்பாஷ்டகம’ என்றும் பெயர் உண்டு, இதன் ஆசிரியர் யார் என்பது தெரியாது. பராசக்தியாகத் திகழும் அன்னையை இவ்வருளாளர் எவ்வாறெல்லாம் துதித்துப் பாடுகின்றார் என்று பார்ப்போம்.
அம்பா சாம்பவி சந்திரமௌளி ரமலா
அபர்ணா உமா பார்வதீ!
காளீ ஹைமவதீ சிவா த்ரிநயனா
காத்யாயனீ பைரவீ!
சாவித்திரீ நவயௌவனா சுபகரீ
சாம்ராஜ்ய லக்ஷ்மீ ப்ரதா!
சித்ரூபா பரதேவதா பகவதீ
ஸ்ரீராஜ ராஜேஸ்வரீ!
(1)
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி்த் தாயே, நீ பக்தர்களுக்குத் தாயாகி இருப்பவள். அவர்களுக்கு அனைத்து க்ஷேமத்தையும் கொடுப்பவள். பிறைச் சந்திரனை சிரசில் சூடியவள். சுயபலமுடையவள். யாருக்கும் கடன்படாதவள். தவம் புரியும்போது இலையைக் கூடப் புசிக்காதவள். நீ பர்வத ராஜனின் புத்ரியான பார்வதி, காளி, ஹிமவானின் மகளானவள். மங்களத்தைச் செய்பவள். மங்களமே உருவானவள். மூன்று கண்களை உடையவள். கார்த்யாயனின் மகள், பக்தர்களின் பயத்தைப் போக்குபவள். உலகம் அனைத்தையும் பெற்றவள். என்றும் இளமையானவள். சுகத்தைச் செய்பவள். சாம்ராஜ்ய லக்ஷ்மியைத் தருபவள். ஞான வடிவம் கொண்டவள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தேவதை ஆனவள். இத்தனைக் குணங்களும் கொண்ட உன்னை நான் வணங்குகின்றேன்.
அம்பா |
- |
தாய் |
சாம்பவி |
- |
க்ஷேமத்தைச் செய்பவள். க்ஷேமத்தைச் செய்யும்
சம்புவின் மனைவியானவள் |
சந்திரமௌளீ |
- |
பிறைச் சந்திரனை சிரசில் சூடியவள். பிறை
சூடியவனான சிவனின் மனைவியானவள் |
ரமலா |
- |
சுயபலமிக்கவள். யார் ஒருவருடைய பலத்தையும்
வேண்டாதவள் |
அபர்ணா |
- |
இலையைக் கூடப் புசிக்காதவள். பர்ணம் = இலை |
உமா |
- |
சிவபெருமானைக் கணவனாகப் பெறத் தவம் புரிந்த
வேளை பார்வதி இலையைக் கூடப்
புசிக்கவில்லையாம். அவளது தாய் “வந்து விடு,
தவம் வேண்டாம்” என்று கூறினாளாம்.
(உ = வந்துவிடு, மா = தவம் வேண்டாம்) தாய்
அழைத்த பெயரான உமா என்பதே அன்னையின்
பெயராக அமைந்தது. |
சிவா |
- |
மங்களமே உருவானவள். மங்களத்தை உண்டு
செய்பவள். |
த்ரிநயனா |
- |
சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்று ஒளிகளையும்
கண்களாக உடையவள். ரஜோ குணம், தமோ குணம்
ஸத்வ குணம் என்ற மூன்று குணங்களையும்
தாண்டியவள். |
சாவித்ரீ |
- |
அனைத்து உயிர்களின் ஆதார சக்தியானவள். |
சாம்ராஜ்ய லக்ஷ்மீ ப்ரதா |
- |
பக்தர்களுக்கு சாம்ராஜ்யங்களையும் பொருளையும்
செல்வத்தையும் வழங்குபவள். |
சித்ரூபா |
- |
ஞானமே வடிவானவள் |
அம்பா மோஹினி தேவதா த்ரிபுவனீ
உற்யானந்த ஸந்தாயினீ
வாணீ பல்லவபாணி வேணுமுரளீ
கானப்பிரியா லோலினீ!!
கல்யாணீ உற்யுடுராஜ பிம்பவதனா
தூம்ராக்ஷ ஸம்உறாரிணீ
சித்ரூபா பரதேவதா பகவதீ
ஸ்ரீராஜ ராஜேஸ்வரீ!!
(2)
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி தாயே..நீ அத்தனை ஜீவராசிகளையும் மோகிக்க வைக்கும் அழகாற்றல் உடையவள். பக்தர்களின் மனதில் ஒளியை உண்டாக்குபவள். பதினான்கு உலகங்களின் ஆதாரம் நீ .. அனைவருக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பவள். ஸரஸ்வதியின் வடிவானவள். தளிர்போன்ற கைகளில் புல்லாங்குழல் கொண்டு வாசிப்பவள். இனிய இசையை ரசிக்கும் விதத்தில் உடலை லாவகமாக அசைப்பவள். மங்கள வடிவானவள். பூரண சநதிரனைப் போன்ற அழகான முகத்தை உடையவள். தூம்ரலோசன் என்ற அசுரனை ஸம்உறாரம் செய்தவள். ஞான வடிவமானவள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தேவதை நீ. (இத்தனைக் குணங்களும் பொருந்திய உன்னை நான் வணங்குகின்றேன்).
மோஹினி |
- |
ஸர்வலோகத்தையும் வசீகரிக்கும் அழகு உடையவள்.
அத்தனை ஜீவராசிகளையும் மோகம் கொள்ளச்
செய்யும் வசீகர அழகுடையவள். |
தேவதா |
- |
ஒளியை உண்டாக்கும் சக்தி. அஞ்ஞானம் எனும்
இருளைப் போககும் ஒளி. |
த்ரிபுவனீ |
- |
14 உலகங்களின் ஆதார சக்தியாகி அவற்றின்
ஸ்வரூபத்தில இருப்பவள் |
ஆனந்த ஸந்தாயினீ |
- |
பக்தர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவள் |
பல்லவபாணி |
- |
தளிர்போன்ற கரங்களை உடையவள். |
வேணு முரளி கானப்ரியா லோலினி |
- |
புல்லாங்குழல் இசையில் விருப்பம் கொண்டு அதன் இசையை ரசிக்கும் விதத்தில் உடலைத்
தெய்வீக அழகுடன் அசைப்பவள். |
(இறைமைக்கு ஆண் வடிவம் கொடுத்தால் அது விஷ்ணுவாகும். பெண் வடிவம் கொடுத்தால் லலிதா பரமேஸ்வரி அல்லது ராஜராஜேஸ்வரி என்றாகும். இதன் காரணத்தாலேயே விஷ்ணு வடிவத்தின் புல்லாங்குழல் அன்னையின் கரங்களிலும் அமைகின்றது)
கல்யாணி |
- |
மங்களத்தைச் செய்பவள். மங்களமே வடிவானவள் |
உற்யுடுராஜ பிம்பவதனா |
- |
பூரணசந்திரனைப் போன்ற அழகான முகத்தைக்
கொண்டவள் |
தூம்ராக்ஷ ஸம்உறாரிணி |
- |
தூம்ரலோசன் என்ற அசுரனை ஸம்உறாரம் செய்தவள்
|
அம்பா நூபுரரத்ன கங்கணதரீ
கேயூர உறாராவலீ!
ஜாதீசம்பக வைஜயந்தி லஉறரீ
க்ரைவேயகை ராஜிதா!!
வீணா வேணுவினோத மண்டிதகரா
வீராஸனே ஸம்ஸ்திதா
சித்ரூபா பரதேவதா பகவதீ
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ!!
(3)
ஸ்ரீராஜராஜேஸ்வரி தாயே .. நீ பாதங்களில் கொலுசுகளை அணிந்திருப்பவள். ரத்னங்களையும் முத்துக்களையும் பதித்த வளையல்களை அணிந்திருப்பவள். முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருபபவள். ஜாதி மல்லிகை, சண்பகம், வைஜயந்தி போன்ற மலர்களாலான மாலைகளை அணிந்திருப்பவள். ரத்னங்களால் ஆன அட்டிகை அணிந்து பிரகாசிப்பவள். வீணையை வாசிக்கும் வினோத அழகுடைய கரங்களை உடையவள். வீராசனத்தில் அமர்ந்திருப்பவள். ஞானமே வடிவானவள். முப்பத்து முக்கோடி தேவர்களுள் தேவதை நீ (இத்தனைக் குணங்களும் பொருந்திய உன்னை நான் வணங்குகின்றேன்)
நூபுரம் |
- |
கால் கொலுசு |
ரத்ன கங்கணதரீ |
- |
ரத்தினங்கள் பதித்த வளையல்களை அணிந்தவள் |
கேயூரம் |
- |
வங்கி என்றழைக்கப்படும் கர ஆபரணம் |
உறாராவலீ |
- |
மாலைகள் அணிந்தவள் |
லஉறரீ |
- |
கூட்டம் |
க்ரைவே யகை |
- |
ரத்னம் பதித்த அட்டிகைகளால் |
ராஜிதா |
- |
பிரகாசிப்பவள் |
வினோத மண்டிதகரா |
- |
வாசிக்கும் அழகான கரங்களை உடையவள் |
ஸம்ஸ்திதா |
- |
அமர்ந்திருப்பவள் |
அம்பா ரௌத்ரிணி பத்ரகாளி
பகலா ஜ்வலாமுகீ வைஷ்ணவீ!
ப்ரஉற்மாணீ த்ரிபுராந்தகீ
ஸுரநுதா
தேதீப்ய மானோஜ்வலா!!
சாமுண்டாஸ்ரித ரக்ஷபோஷ ஜனனீ
தாக்ஷாயணீ வல்லபா!
சித்ரூபா பரதேவதா பகவதீ
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரீ
(4)
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி தாயே..நீ ருத்ரனின் சக்தியாய் விளங்குபவள்..மங்களத்தைச் செய்பவள். கரிய நிறத்தைக் கொண்டவள். அக்னி ஜ்வாலையை முகமாகக் கொண்டவள். விஷ்ணுவின் சக்தியானவள். பிரம்மனின் சக்தியானவள். திரிபுரம் எரித்த பரமசிவனின் சக்தியானவள். தேவர்களால் துதிக்கப்படுபவள். பேரொளி மிக்கவள். கம்பீர வடிவுடையவள். சண்ட
ன், முண்டன் என்ற அசுரர்களை ஸம்உறாரம் செய்தவள். உன்னைத் துதித்துப் போற்றும் பக்தர்களை அனுசரித்துக் காப்பவள். தக்ஷணின் மகளானவள். அனைவர்க்கும் தலைவியானவள். ஞானமே வடிவானவள் (இத்தனைக் குணங்களும் பொருந்திய உன்னை நான் வணங்குகின்றேன்.
ரௌத்ரிணி |
|
ருத்ரனின் சக்தியாய் விளங்குபவள் |
பத்ரகாளி |
|
மங்களத்தைச் செய்பவள் |
பகலா |
|
கரிய நிறத்தை உடையவள்
|
ஜ்வாலாமுகீ |
|
அக்னி ஜ்வாலையை முகமாகக் கொண்டவள் |
வைஷ்ணவி |
|
விஷ்ணுவின் சக்தியானவள் |
ப்ரஉற்மாணீ |
|
பிரம்மனின் சக்தியானவள் |
த்ரிபுராந்தகீ |
|
திரிபுரம் எரித்த பரமசிவனின் சக்தியானவள் |
ஸுரநுதா |
|
தேவர்களால் பூஜிக்கப் பெற்றவள் |
தேதீப்யமானோஜ்வலா |
|
ஒளிமிக்கக் கம்பீரமுடையவள் |
சாமுண்டாஸ்ரிதா |
|
சண்டனையும் முண்டனையும் ஸம்உறாரம் செய்தவள் |
ரக்ஷபோஷ ஜனனீ |
|
தன்னை அண்டியவர்களைப் பாதுகாப்பவள் |
வல்லபா |
|
தலைவி |