
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்
அம்பா சூலதனு: கசாங்கு சதரீ
உற்யர்த்தந்து பிம்பாதரீ!
வாராஉறீ மதுகைடப ப்ரசமனீ
வாணீ ரமா ஸேவிதா!!
மல்லாத்யா சுரமூகதைத்ய மதனீ
மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபா பரதேவதா பகவதீ
ஸ்ரீராஜராஜேஸ்வரீ!!
(5)
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி தாயே.. நீ சூலம், வில், கசை, அங்குசம் என்ற ஆயுதங்களைக் கரங்களில் தாங்கிக் கொண்டிருக்கின்றாய். நீ பிறை சூடிய பெருமாட்டி, பிறை சூடிய பெருமானின் மனைவி. விஷ்ணுவின் சக்தி வடிவமான தேவி. மது, கைடபன் என்ற அசுரர்களை வதம் செய்தவள். ஸரஸ்வதி, லக்ஷ்மி என்ற இரு தேவியர்களாலும் பூஜிக்கப்படுபவள். மல்லன் முகன் போன்ற அசுரர்களையும் வதம் செய்தவள். கருணை உள்ளம் கொண்ட மஹேஸ்வரனின் தேவியும் நீ. ஞானமே வடிவானவள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தலைவியானவள் (இத்தனைக் குணங்களும் பொருந்திய உன்னை நான் வணங்குகின்றேன்).
சூலதனு |
- |
சூலம், வில் |
கசா |
- |
கசை |
அங்குசதரீ |
- |
அங்குசத்தைக் கையில் கொண்டவள் |
உற்யர்த்யேந்து பிம்பாதரீ |
- |
பிறை மதியைச் சூடியவள் |
வாராஉறீ |
- |
வராக வடிவம் கொண்ட விஷ்ணுவின் சக்தி |
மதுகைடப ப்ரசமனீ |
- |
மது, கைடபன் போன்ற அசுரர்களை வதம் செய்தவள் |
வாணீ |
- |
ஸரஸ்வதீ ஞானத்திற்கும் செல்வத்திற்கும் |
ரமா |
- |
லக்ஷ்மீ அதிபதிகளான
தேவியரே பராசக்தியைப்
பூஜிப்பதால் அவளது பார்வையே பக்தர்களின்
வித்யா கர்வத்தையும் பண கர்வத்தையும்
போக்கவல்லது |
ஸேவிதா |
- |
பூஜிக்கப் பெற்றவள். |
மல்லாத்யா சுர மூகதைத்யமதனீ |
- |
மல்லன், முகன் போன்ற அசுரர்களை
வதம் செய்தவள். |
அம்பா ஸ்ருஷ்டி வினாசபாலனகரீ
சார்ய விசம் சோபிதா!
காயத்ரீ ப்ரணவாக்ஷரா ம்ருதரஸ:
பூர்ணானு ஸந்தீ க்ருதா!
ஓங்காரீ விநதா ஸதார்சிதபதா
சோத்தண்ட தைத்யா பஉறா
சித்ரூபா பரதேவதா பகவதீ
ஸ்ரீராஜ ராஜேஸ்வரீ!
(6)
ஸ்ரீராஜராஜேஸ்வரி தாயே .. நீ (ஸ்ருஷ்டி) படைத்தல், (ஸ்திதி) காத்தல், (ஸம்உறாரம்) அழித்தல் என்ற முத்தொழில்களையும் புரிபவள். ஏதமிலாதவளாகவும், ஒப்புயர்வற்ற அழகுடையவளாகவும் இருக்கின்றாய். காயத்ரீ எனும் மந்திரத்தின் வடிவமாக இருக்கின்றாய். ஞானிகளால் இடையறாது தியானிக்கப்படுகின்றாய். ஓம்காரத்தின் ஸ்வரூபமாகத் திகழ்கின்றாய். விநதாவின் பிள்ளையான கருடனால் அர்ச்சிக்கப்படும் திருவடிகளை உடையவள். ஆணவத் திமிரினால் கொழுத்த அசுரர்களை சம்உறாரம் செய்தவள் நீ. ஞானமே வடிவானவள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தேவதை நீ (இத்தனைக் குணங்களும் பொருந்திய உன்னை நான் வணங்குகின்றேன்.)
ஸ்ருஷ்டி வினாசபாலனகரீ |
- |
படைத்தல், காத்தல், அழித்தல்
என்ற முத்தொழில்களைப் புரிபவள்.
(ரஜோ குணத்தினால் ஸ்ருஷ்டியையும
ஸத்வ குணத்தினால் காத்தலையும்,
தமோ குணத்தினால் அழித்தலையும்
புரிவதால் பக்தர்களது இம்மூன்று
குணங்களையும் செயல்படுத்துவதும்
பராசக்தியே!) |
சார்ய விசம் |
- |
ஏதமிலாதவள் (தையல் நல்லாள்) |
சோபிதா |
- |
அழகில் சிறந்தவள்
(அழகிற்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி) |
காயத்ரீ |
- |
24 அக்ஷரங்களைக் கொண்ட மந்திரம்
(சூர்ய மண்டலத்தில் அமைந்திருக்கும
பரமாத்ம தத்துவம்) |
ப்ரணவாக்ஷரா ம்ருதரஸ |
- |
ஓம்காரப் பிரணவமான அமிர்தசரோவரம்
(பிரணவத்தின் சாரம்) |
பூர்ணானு ஸந்தீ க்ருதா |
- |
ஞானிகளால் இடையறாது பூஜிக்கப்படுபவள் |
ஓங்காரீ |
- |
ஓம்காரத்தின் ஸ்வரூபமானவள். |
விநதா ஸீதார்சிதபதா |
- |
விநதாவின் மகனான கருடனால்
பூஜிக்கப்படும் பாதங்களை உடையவள்.
(கருடனால் பூஜிக்கப்படுபவள் என்பதால்
விஷ்ணுவின் வடிவத்தில் உள்ளவள்
என்று கொள்ளலாம்) |
சோத்தண்ட தைத்யா பஉறா |
- |
ஆணவத் திமிரினால் கொழுத்த அசுரர்களை
வதம் செய்தவள். |
அம்பா சாஸ்வதி சாகமாதி வினுதா
உற்யார்யா மஉறா தேவதா
யா ப்ரஉற்மாதி பிபீலிகாந்த ஜனனீ
யாவை ஜகன் மோஹி நீ !!
யா பஞ்ச ப்ரணவாதிரேப ஜனனீ
யாசித்கலா மாலிநீ
சித்ரூபா பரதேவதா பகவதீ
ஸ்ரீராஜ ராஜேஸ்வரீ !!
(7)
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி தாயே .. நீ நிரந்தரமானவள் . சாஸ்வதமான வேதங்களால் பூஜிக்கப் பெறுபவள். ஒப்புயர்வற்ற தெய்வம் நீ .. பிரம்மா முதல் பிராணிகளில் சிறியதான எறும்பு ஈறாக அனைத்து உயிர்களையும் பெற்றெடுத்தபவள். ஈரேழு புவனங்களையும் மோஹிக்கக்க் கூடியவள். ஐந்து வகையான பிரணவ ஒலிகளையும் அருளிச் செய்தவள். அனைத்து ஜீவராசிகளிடத்திலும் அறிவுத் துளியாகத் திகழ்பவள். ஞானமே வடிவானவள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தேவதை நீ. (இத்தனைக் குணங்களும் பொருந்திய உன்னை நான் வணங்குகின்றேன்)
ஸாஸ்வதி |
- |
அழிவற்றவள் ,, நிரந்தரி |
ஆகமாதி வினுதா |
- |
வேதங்களால் போற்றப்படுபவள் |
உற்யார்யா மஉறா தேவதா |
- |
ஒப்புயர்வற்ற தேவதை |
யா ப்ரஉற்மாதி பிபீலிகாந்த ஜனனீ |
- |
பிரம்மன் முதல் எறும்பு ஈறாக அனைத்து
ஜீவராசிகளையும் ஈன்றவள் |
யா பஞ்ச ப்ரணவாதிரேப
ஜனனீ |
- |
அகார, உகார, மகார, அனுஸ்வர, துர்ய என்ற
பஞ்சப்ரணவ ஒலிகளுக்கும் தாயானவள் |
யாசித்கலா மாலிநீ |
- |
அறிவுத் துளியாகத் திகழ்பவள் |
அம்பா பாலித பக்தராஜ ரசிதம்!
அம்பாஷ்டகம் ய: படேத்!
அம்பா லோலகடாக்ஷ வீஷீலலிதம்!
சைஸ்வர்ய மவ்யாஉறதம்!!
அம்பா பாவன மந்த்ர ராஜபடனா
தந்தே சமோக்ஷப்ரதா
சித்ரூபா பரதேவதா பகவதீ
ஸ்ரீராஜ ராஜேஸ்வரீ!!
(8)
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி தாயே .. அம்பாளின் அருளுக்குப் பாத்திரமான சிறந்த பக்தனால் இயற்றப்பெற்ற அம்பாஷ்டகத்தை எவன் தினமும் படிக்கின்றானோ அவன் உனது அசைந்தாடும் கண்களின் கடைக்கண் அருளிற்குப் பாத்திரமாகின்றான். அவன் தங்கு தடையல்லாத ஐஸ்வர்யத்தையும் செல்வத்தையும் அடைகின்றான். மனதைத் துய்மைப்படுத்தும் ராஜமந்திரமான இத்துதியைப் பாடுவதால் அவன் இப்பூவுலக வாழ்க்கைக்குத் தேவையான இகபர சௌக்கியங்களையும் அனுபவித்துப் பின்பு கடைசியில் அழியா முக்தி ஆனந்தமான மோக்ஷத்தையும் பெறுகின்றான். ஞானமே வடிவானவளே .. (இத்தனைக் குணங்களும் பொருந்திய உன்னை நான் வணங்குகின்றேன்)
பக்தராஜ ரசிதம் |
- |
அம்பாளின் அருளுக்குப் பாத்திரமான
சிறந்த பக்தனால் இயற்றப் பெற்ற |
ய: படேத் |
- |
எவன் ஒருவன் தினமும் துதிக்கின்றானோ |
லோல கடாக்ஷ வீஷீலலிதம் |
- |
அசைகின்ற கண்களின் கடைப் பார்வையின
அருளைப் பெறுகின்றான். |
மவ்யாஉறதம் |
- |
தங்கு தடையில்லாத |
பாவன |
- |
மனதைத் தூய்மைப்படுத்தும் |
மந்த்ர ராஜபடனா |
- |
மந்திரங்களின் ராஜாவான (உயர்வான) |
தந்தே |
- |
கடைசியில் |
மோக்ஷப்ரதா |
- |
அழியா முக்தி ஆனந்தமாகிய அருள் |
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம் முற்றிற்று
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகத்திற்கு விளக்கமளித்து எனக்கு உதவிய திரு கணபதி ராமச்சந்திரன் அவர்களுக்கு எனது நன்றி.
இத்துதுதிப்பாடல்களுக்கு விளக்கவுரைக்காகத் துணைபுரிந்த நூல்கள்:
1. Upasana Sri Kailash Ashrama Mahasamasthana Publication, Bangalore
2. ஞானாட்சிதேவி அருட்பாமாலை - கைலாச ஆசிரம் வெளியீடு, பெங்களூர்