
சக்கரம் சுழல்கின்றதே!
காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா என்று மகாகவி பாரதியார் பாடினார். கருப்பு நிறமாக எங்குத் தோன்றினாலும் அது அவருக்குக் கண்ணனை நினைவு செய்ததாம்.
"பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்" என்று ஒரு திரைப்படப் பாடல் காதலன் அவனது காதலிக்கு ஒற்றை நாணயம் ஒன்றினைத் தருகின்றான். அவளுக்கு அந்த ஒற்றை ரூபாய் நாணயத்தைப் பல்லாங்குழியின் வட்டம் நிணைவுறுத்துகின்றது. பௌர்ணமி நிலவு, செவவந்திப் பூவின் மையம், கடிகாரத்தின் முகம் என்று எதைப் பார்த்தாலும் அவளுக்கு அந்த ஒற்றை ரூபாய் நாணயமாகத் தெரிகின்றது. இதைத்தான் "Association of Matter" (காணும் பொருட்களின் தொடர்பு) என்று கூறுவார்கள்.
அம்பிகையின் 1000 நாமங்களைக் கூறும் லலிதா ஸஉறஸ்ரநாமம் அவளது உறைவிடமான ஸ்ரீ சக்கரத்தைப் பற்றி ஸ்ரீ சக்ரராஜ நிலயா ஸ்ரீமத் திரிபுரசுந்தரி என்று கூறுகின்றது. சக்கரங்களிலேயே உயர்வு கொண்டதான ஸ்ரீ சக்கரத்தில் நிலையாக வீற்றிருப்பவள் திரிபுரசுந்தரி என்று பொருள்பட தேவியின் இருப்பிடத்தைக் கூறுகின்றது. மூன்று கோட்டுப் பூபுரம், மூன்று வட்டம், பதினாறு தளம், எட்டு தளம், பதினான்கு கோணம், இரண்டு பத்து கோணங்கள், எட்டுக் கோணம் மற்றும் முக்கோணத்திற்கு மத்தியில் ஜாலந்தர பீடத்தில் பிந்து ஸ்தானத்தில் உறைபவள் திரிபுரசுந்தரி என்று கூறும் ஸ்ரீ லலிதா ஸஉறஸ்ரநாமம்.
எங்கெல்லாம் சக்கரங்கள் சுழல்கின்றனவோ அங்கெல்லாம் அம்பிகையின் ஸ்ரீ சக்கரம் தோன்றுவது போல் எனக்குள் ஒரு இன்பமான உணர்வு உண்டாகும். அதையே கட்டுரயாக வடிக்க முயன்றேன்.
கிராமத்திற்குச் சென்றேன்,அங்கு குயவன் களிமண் கொண்டு பானையை உருவாக்கிக் கொண்டிருந்தான். அவன் சுழற்றுவது ஒரு சக்கரம். அதன் மீது அவன் களிமண்ணை உருண்டையாக வைத்து அதனை அழகான பானயாக்குகின்றான். பானையை உருவாக்குவது ஒரு சக்கரம்.
அருகில் ஒரு பெண் கிணற்றிலிருந்து நீரை இறைத்துக் கொண்டிருக்கின்றாள். கயிறு, வாளி இவை இரண்டும் கிணற்றுக்குள் இறக்கப்படுகின்றன. இதை இறக்குவதும் பின்பு நீர் மொண்டு வெளிக் கொணர்வதும் கிணற்றின் மேல் உள்ள மரத்தின் மத்தியில் இருக்கும் இராட்டினம் என்னும் சக்கரத்தின் சுழற்சியால்தான். கிணற்று நீரை இறைப்பதும் ஒரு சக்கரம்தான்.
வயல் வெளிக்குப் போகின்றேன், "ஏலேலோ" பாட்டுடன் விவசாயி பயிருக்கு நீர் மொண்டு பாய்ச்சுகின்றான். எருதினை ஓட்டி கிணற்றிலிருந்து கொப்பரையின் வாயிலாக நீர் இறைக்க உதவுகின்றது ஒரு சக்கரம்.
மண் வீதியில் சிறுவன் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு ஒரு பழய சக்கரத்தை உருட்டிச் செல்கின்றான். அது அவனுக்குவிளையாட்டுப் பொருள் (Toy). அவும் ஒரு சக்கரம்.
வீட்டுத் திண்ணையில்மூதாட்டி ஒருத்தி மாவை அரைத்துக் கொண்டிருக்கின்றாள். அவள் பயன்படுத்வது கல் திருகை (இயந்திரக்கல்). அதன் மேல் பாகம் சுழல்கின்றது சக்கரமாக.
கத்தியைச் சாணை பிடிக்கின்றான் ஒருவன். அவன் கத்தியைத் தீட்டுவது சுழலும் ஒரு சக்கரத்தின் மேல் கத்தியைத் தீட்டுவது ஒரு சக்கரம்.
மிட்டாய் வியாபாரி குழுமியிருக்கும் குழந்தைப் பட்டாளத்திற்குப் பஞ்சு மிட்டாய் செய்து கொடுக்கின்றான். பெரிய டிரம் போன்ற சட்டிக்குள் குச்சியை வைத்துக் கொண்டு சுழற்றுகின்றான். அந்தச் சட்டியை இயக்குவ ஒரு சக்கரம்.
கரும்யைப் பிழிந்து சாறு எடுத்து கரும்பு ஜூஸ் செய்து கொடுக்கின்றான் மற்றொரு வியாபாரி. அவனுக்குக் கரும்பை நசுக்கிச் சாறு எடுக்க உபயோகமாகின்றது ஒரு சக்கரம்.
சந்தைப் பொட்டலில் (சந்தை நடக்கும் மைதானத்தில் ) குழந்தைகள் ஆனந்தமாக இராட்டினத்தில் சுற்றிச் சுற்றி வருகின்றனர். இராட்டினத்தை இயக்குவதற்கு இருவர் சுழற்றுவது ஒரு சக்கரம்.
கிராமத்தைச் சுற்றி வந்த மாட்டு வண்டி. அதனை இயக்குவது இரண்டு சக்கரங்கள்.
கிராமத்துக் கோயில் தேர் மெதுவாகச் செல்கின்றது. பக்தர்கள் அதனை வடமிழுத்துச் செல்கின்றனர். அதன் கீழ் உள்ளது சுழலும் நான்கு சக்கரங்கள்.
கிராமத்தின் கடைவீதியில் சட்டை தைத்துக் கொண்டிருக்கின்றான் தையல் தொழிலாளி. அவன் இயக்கும் தையல் இயந்திரத்தின் முக்கிய பாகம் ஒரு சக்கரம்.
கிராமத்தில் ஒரு ஆசிரமம். அங்கு ஐந்தாறு முதியவர்கள் அமர்ந்து நூல் நூற்றுக் கொண்டு இருக்கின்றனர். ஒரு கையில் பஞ்சு. மற்றொரு கையால் சுற்றிக் கொண்டிருந்தது இராட்டினம். அதுவும் ஒரு சக்கரம்தான்.
கல்யாண மண்டபத்தில் பவர் கட் என்றார்கள். ஜெனரேட்டர் இருந்தது. அதை இயக்க ஒரு நாடாவை இழுத்து விட்டார் மின்துறை ஊழியர். அது சுற்றிச் சுற்றி வந்தது இரண்டு சக்கரங்களில்.
கிராமத்தைத் தாண்டி (சைக்கிளில்) மிதி வண்டியில் நகரம் நோக்கி வருகின்றேன். சைக்கிளின் இயங்கும் பாகம் இரண்டு சக்கரங்கள்.
நகரத்தில் சைக்கிளின் அருகில் ஸ்கூட்டர்கள், மோட்டார் யைக்குகள், மொபெட்கள் அனைத்தும் இரண்டு சக்கரங்களால் இயங்கும் வாகனங்கள்.
ஆட்டோ ரிக்க்ஷா ஓடுகின்றது. அதற்கு மூன்று சக்கரங்கள். சாமான்கள் ஏற்றிச் செல்லும் சிறிய வாகனங்கள். அவற்றிற்கும் மூன்று சக்கரங்கள்.
விதவிதமான ஆட்டோமொபைல் கார்கள். அனைத்திற்கும் நான்கு சக்கரங்கள். பேருந்துகள் அவற்றிற்கு முன்பாகத்தில் இரண்டு, பின்பாகத்தில் நான்கு மொத்தம் ஆறு சக்கரங்கள். சாமான்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் அவற்றிற்கும் ஆறு சக்கரங்கள். அத்தனை வாகனங்களயும் ஓட்டுநர் செலுத்வது ஒரு "Steering Wheel" எனும் சக்கரம்.
தூரத்தில் புகை வண்டி கூவிக் கொண்டு செல்கின்றது. அத்தனை ரயில் பெட்டிகளையும் கூட்டிப் பார்த்தால் கிட்டத்தட்ட ஐம்பதிலிருந்து அறுபது சக்கரங்கள்.
வானத்தில் விமானம் பறந்து வந்து விமான தளத்தில் இறங்குகின்ற. அதற்கும் பக்கத்திற்கு இரண்டு சக்கரங்கள் வீதம் எட்டுச் சக்கரங்களும், முன்புறத்தில் இரண்டு சக்கரங்களாக மொத்தம் பத்துச் சக்கரங்கள்.
காலையில் குளித்து விட்டு நகைகளப் போட்டுக் கொள்கிறோம். தோடுகளை இரண்டு காதுகளிலும் அணிந்து கொள்ளப் பொருத்தப்படும் திருகாணிகள் இரண்டு சக்கரங்கள். மூக்குத்தியைப் பொருத்வதற்கும் ஒரு சிறிய சக்கரம். கைக் கடிகாரத்திற்குச் சாவி கொடுப்பது ஒரு குட்டிச் சக்கரம். அட கடிகாரம் கீழே விழுந்து பின்பக்கம் கழன்று விடுகின்ற. அதன் உள்ளேப் பார்த்தால் கடிகாரத்தை இயக்கும் இரண்டு சக்கரங்கள்.
டிரெஸ் செய்து கொண்டு வங்கிக்குச் சென்று பணம் எடுத்துக் கொண்டிருந்தேன். வங்கி மேலாளரின் பின்புறம் பெரிய பெட்டகக் கதவை வேறொரு அதிகாரி திறக்கின்றார். அதுவும் "Steering Wheel" வடிவம் கொண்ட ஒரு சக்கரம்.
சினிமாவிற்கு டிக்கெட் வாங்கிப் பார்க்கப் போனால் தியேட்டரில் பட ரீலைச் சுற்றுவது இரண்டு சக்கரங்கள். சினிமாக் கொட்டகை அருகே குழந்தைகளின் குதூகல மைதானமாமே, அங்கே பிரம்மாண்டமான இராட்டினம் (Giant Wheel) அதுவும் ஒரு பெரிய சக்கரம்.
சமயலறையில் சமையல் செய்ய பழனி காய்கறிகளை நறுக்கி வத்திருந்தான் வெண்டைக்காய் வறுவலுக்காக. வௌளரிக்காய் மற்றும் தக்காளி சாலடுக்காகக் கத்தரிக்காய் பஜ்ஜிக்காக அடடா!! எத்தன எத்தன சக்கரங்கள்!!
தேநீர் கேட்டேன்,எடுத்துக் கொடுத்த அட்டைப் பெட்டியின் மேல் சக்ரா கோல்டு என்று பெயர். அவும் சக்கரம். துணி துவைக்க சோப்புத்தூள் கேட்டாள் வேலைக்காரி. சோப்புக் கட்டியை எடுத்தால் அதுவும் Wheel Detergent Bar. அதில் ஒரு சக்கரம்.
தீபாவளியன்று குழந்தைகள் ஆரவாரத்துடன் கொளுத்தும் பட்டாசு விஷ்ணு சக்கரம்.
இந்தியக் குடியரசு தினத்தன்று விரசாகசச் செயல் புரியும் காவல் படையினருக்குக் கொடுக்கப் பெறும் மிக உயர்ந்த விருதுதான் "பரம் வீர் சக்ரா" காற்றில் தேசியக் கொடி படபடக்கின்றது. அதன் நடுவில் அசோக சக்கரம். தர்ம சக்கரம். வாழ்க்கையே ஒரு சக்கரம்தானோ!!!
நமக்குள் ஆறு ஆதார சக்கரங்கள். மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விவீர்த்தி, ஆக்ஞா என்ற ஆறு சக்கரங்களையும் தாண்டிக் குண்டலினி சக்தியான இறையுணர்வுடன் ஒன்றுகிறது. அவ்வாறு ஒன்றும் இடம்தான் யஉறஸ்ரார சக்கரம். அப்பொழுது உணர்வதுதான் விஷ்ணுவின் சுதர்சன சக்கரம்.
இத்தனைச் சக்கரங்களும் எனது நினைவிற்குக் கொண்டு வருவது ஒரே ஒரு சக்கரம். அதுதான் அம்பிகையின் ஸ்ரீ சக்கரம்.
 |
 |
|