
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
இவ்வாண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று பாரத ஹிந்துக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியினைக் கொண்டாடப் போகின்றோம். அனைவருககும் சொல்லவேண்டும் என்று எனக்கு ஆசைதான். அது இயலாத காரியம். ஏதோ ‘அபிராமி’ வாசகர்களுக்காகவாவது வேண்டுகோள் விடுக்கலாமே. அவர்கள் அவர்களது நட்பிற்கும் சுற்றத்திற்கும் கூறலாம் அல்லவா?
விநாயகர் நம் வீட்டுப் பிள்ளையப் போன்றவர். அதனால்தான் அவரைப் 'பிள்ளயார்' என்று அழைக்கின்றோம். அவர் ஆடம்பரம் இல்லாதவர். ரொம்ப ரொம்ப சிம்பிள் (simple) அரச மரத்தடியிலும் அவரை வணங்கலாம். அருகம்புல் கொண்டும் அவரை அர்ச்சிக்கலாம். மஞ்சள் பிடித்தும் அவரை வணங்கலாம். களிமண்ணில் படைத்தும் அவரைப் பார்க்கலாம். மஞ்சளும் களிமண்ணும் பஞ்சபூதங்களில் ஒன்றான ப்ருத்வியிலிருந்து தோன்றி பஞ்சபூதங்களில் மற்றொன்றான நீரில் எளிதில் கரையக் கூடியவை. சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றவர்!! பக்தியோடு சுகாதாரத்தையும் வளர்க்கக்கூடியவர். இதைவிடுத்து ரசாயனக் கலவையால் ஆன பிரம்மாண்டமான பிள்ளயார்களைப் படைத்துக் கடலில் கிரேன்களின் உதவியுடன் அமுக்கிக் காலால் மிதித்து அழுத்த வேண்டுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!!. 'அபிராமி' வாசகர்கள விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன். நீங்களாவது மஞ்சள் அல்ல களிமண் பிள்ளயாரத்தான் இவ்வாண்டிலும், இனிமேல் வரும் ஆண்டுகளிலும் படத்து வணங்கி மகிழ்வோம் என்று உறுதி மொழி எடுத்க் கொள்ளுவீர்களா? உங்கள் அனவருக்கும் விநாயக சர்த்தி வாழ்த்துக்கள். 'அபிராமி' இதழ் ஆரம்பக் காலத்தில் தெய்வத்திரு வித்வான் லெட்சுமணன் அவர்கள் விருப்பத்திற்கிணங்க மகான் ஆதிசங்கரரின் கணேச பஞ்சரத்தினத்தத் தமிழில் என் சிற்றறிவிற்கு எட்டிய வகயில் தமிழாக்கம் செய்ய முயன்றேன். ஒரு சில சிறு மாற்றங்களுடன் 'அபிராமி' வாசகர்களுக்கு என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதற்காக எனது அன்புப் பரிசாக வழங்க விழைகின்றேன். நிறை இருப்பின் அது விநாயகனின் அருள். குறைகள் இருப்பின் அது அடியவளின் தவறு!!
ஸ்ரீஆதிசங்கரர் சம்ஸ்கிருதத்தில் அருளிய ஸ்ரீகணேச பஞ்சரத்னம்
(தமிழாக்கம்: செந்தமிழ்த் திலகம் ஸ்ரீமதி தேவகி முத்தையா, எம்.ஏ., எம்.ஃபில்)
மகிழ்ச்சி பொங்க மோதகத்தக் கரத்தில் கொண்டு விளங்குவாய!
மனம் லயித்து முயல்வோர்க்கெல்லாம் முக்தி வழி காட்டுவாய்!
பிறை மதியைச் சிரசு தன்னில் பொலிவுடனே சூட்டுவாய்!
பேருலகம் ஏழினையும் பெருமையுறக் காத்திடுவாய்!
தலைவர்கள் அனவருக்கும் தலைவனாக இருப்போனே
தலைவணங்கும் அனைவருக்கும் சரணாலயமாய்த் திகழ்வோனே!
யான முக அசுரனையும் வெற்றி கொண்ட நாயகனே!
ஈரம் மிக்க உன்னை நான் என்றும் வணங்கி மகிழுவேன்!
உன்னை அணுகி வணங்காதவர்க்கு அச்சமதைக் கொடுத்திடுவாய!
அணுகி உன்னை வணங்குவோர்க்கு ஆபத்தைப் போக்கிடுவாய!
ஒளிவீசும் பாணியிலே உதய சூரியனை மிஞ்சிடுவாய!
அசுரர்களும் தேவர்களும் உன்தாள் வணங்கச் செய்திடுவாய!
தேவர்களுக்குத் தலைவனே! யாவர்க்கும் முதல்வனே!
யானமுகக் கடவுளே! தடைகளெல்லாம் களைபவனே!
உயர்ந்தவற்றுள் உயர்ந்தவனே! உறுதிமிக்க நிரந்தரனே!
உன்னை என்றும் அணுகி நான் சரணடந்து வணங்குவேன!
ஈரேழு உலகனைத்தும் மகிழ்ச்சி காணச் செய்திடுவாய்!
இன்னல் செய்யும் அசுரர் எல்லாம் இல்லாமல் ஆக்கிடுவாய்!
செழிப்புடனே தொங்குகின்ற பெரும் தொந்திதனை உடையவனே!
பெரும் கருணைக்கு இருப்பிடமே! தவறுகளைப் பொறுப்பவனே!
வணங்குவோர்க்குப் புகலிடமே! புகழ் சேர்க்கும் செல்வப் பெருமானே!
ஊக்கத்தைக் கொடுப்பவனே! இனிய வாழ்வு சேர்ப்பவனே!
தங்கம் போல் ஜொலிப்பவனே! தரணிக்கு மூலவனே!
தலைதாழ்த்தி உன்ன நான் விரும்பி என்றும் வணங்குவேன்!
வறியவர்கள் துயரம்தன நொடியினிலே போக்கிடுவாய்!
வளம தரும் நான்மறையின் இருப்பிடமாய் நிலைத்திடுவாய்!
திரிபுரம் எரித்த சிவனாரின் மந்தர்களில் மூத்தவனே!
தேவருக்குத் துன்பம தந்த அசுரர்களைத் துடைத்தவனே!
ஜகத்தை அழிக்கும் யமனுக்குப் பயத்தை அளிக்கும் உத்தமனே!
அக்னி போன்ற தேவர்க்கு அழகுதனைக் கொடுப்பவனே!
மத நீர்ப்பெருக்குப் பொங்கிடும் கதுப்புகளை உடயவனே!
மாதவர்கள் போற்றும் உன்னை நான் சரணடந்து வணங்குவேன்!
மனத்தால் எண்ணிப் பார்க்க இயலா அழகு உருவம் கொண்டவா!
மலர்ச்சிமிகு எழில் தந்தப் பற்களையும் உடையவா!
‘பக்தர்களுக்கு இன்னல் தரும் இடயூறுகளைக் களைபவா!
பரமயோகியரின் மனத்தில் இடயறாது வசிப்பவா!
யமனை உதைத்த சிவனின் செல்லப் பிள்ளையே!
அழகில் உனக்கு ஒப்பானவர் எங்கும் யாரும் இல்லையே!
சுடர் வீசும் ஒற்றையாம் கொம்பு தன்னை உடயவா!
தூய உன திருவடியை நாடி நானும் வணங்குவேன்!
காலை வேளைதன்னிலே கணேசனை வணங்குவார்!
சீலமிகு வாழ்வுதனை நீளப் பெற்று வாழுவார்!
குற்றமற்ற மனநிலையைக் குறைவின்றி கொண்டிடுவார்!
குன்றுபோல் மகிழச்சிதனை என்றும் தாமே பெற்றிடுவார்!
கேட்போரை மயங்க வக்கும் வாக்கு வன்மை அடைந்திடுவார்!
ஏற்றமிகு சுற்றத்தை இயல்பாகக் கண்டிடுவார்!
உயர் விநாயகரின் ரத்ன மாலைதனை ஓதுவார்!
உலகமெல்லாம் போற்றும்வண்ணம் புவிமீது என்றும் வாழுவார்!.